- Advertisement -
Homeவிளையாட்டு5 வருஷமா தேடுறோம்.. அந்த வீரரை போல் யாரையுமே பார்க்க முடியவில்லை.. ரோகித் சர்மா பேட்டி

5 வருஷமா தேடுறோம்.. அந்த வீரரை போல் யாரையுமே பார்க்க முடியவில்லை.. ரோகித் சர்மா பேட்டி

- Advertisement-

இந்தியாவில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணி வெற்றிபெற்றதற்கு யுவராஜ் சிங் முக்கியக் காரணமாக அமைந்தார். நம்பர் 4 பேட்ஸ்மேன் மற்றும் பார்ட் டைம் பவுலர் என்று இரு பொறுப்பிலும் அமர்க்களப்படுத்தினார். ஆனால் யுவராஜ் சிங் இந்திய அணியில் இருந்து வெளியேறிய பின், அவரது இடத்தை எந்த வீரராலும் பூர்த்தி செய்ய முடியவில்லை.

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பைத் தொடரிலேயே இந்திய அணி நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் தெளிவில்லாமல் விஜய் சங்கர் மற்றும் கேஎல் ராகுலை பயன்படுத்தியது. அதன் விளைவாகவே தோல்வியடைந்து வெளியேறியது. அதன்பின் மீண்டும் உலகக்கோப்பைத் தொடர் நெருங்கியுள்ள சூழலில், இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேன் யார் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நம்பர் 4 வரிசையில் ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 20 போட்டிகளில் விளையாடி 805 ரன்கள் சேர்த்துள்ளார். ஆனால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் போது ஏற்பட்ட காயத்திற்கு பின் ஸ்ரேயாஸ் ஐயர் இதுவரை அணிக்கு திரும்பவே இல்லை. ஆசியக் கோப்பை தொடரிலும் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, இந்திய அணியின் நம்பர் 4 பேட்ஸ்மேன்கள் யார் என்பதில் இப்போது மட்டுமல்லம் கடந்த 5 ஆண்டுகளாகவே பிரச்சனை உள்ளது. கேப்டன்சியை ஏற்பதற்கு முன்பாகவே நம்பர் 4ல் யார் ஆடுகிறார்கள் என்று கவனித்து வந்துள்ளேன். கடைசியாக யுவராஜ் சிங் மட்டுமே நம்பர் 4ல் சிறப்பாக ஆடினார்.

- Advertisement-

அதன்பின் ஸ்ரேயாஸ் ஐயர் நம்பர் 4ல் நன்றாக ஆடினார். ரெக்கார்டுகளும் அதனை தான் சொல்கின்றன. ஆனால் மீண்டும் நம்பர் 4ல் ஆடிய பேட்ஸ்மேன் காயத்தால் இந்திய அணியில் இல்லாத நிலை உள்ளது. இதனால் அடுத்தடுத்த தொடர்களில் நிறைய வீரர்களை சோதனை செய்ய ஆலோசித்துள்ளோம்.

ஸ்ரேயாஸ் மற்றும் கேஎல் ராகுல் மீண்டும் வந்தாலும், அவர்களின் செயல்பாடுகளையும் பார்க்க வேண்டியுள்ளது. இதனால் ஆசியக் கோப்பையின் போது அழுத்தமான சூழல்களில் இளம் வீரர்களை களமிறக்கி சோதிக்க விரும்புகிறோம். அதன் மூலம் உலகக்கோப்பைத் தொடரில் வீரர்களை தேர்வு செய்வோம் என்று கூறியுள்ளார்.

சற்று முன்