அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் விதிமுறைப்படி வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டும் சேர்த்தது. அதிகபட்சமாக அயர்லாந்து அணியின் மெக்கர்த்தி 33 பந்துகளில் 51 ரன்கள் விளாசி அசத்தினார்.
இதையடுத்து இந்திய அணி 6.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 46 ரன்கள் சேர்த்திருந்த போது, கனமழை பெய்தது. மழை பெய்த நிற்காத சூழலில், டிஎல்எஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போட்டியின் ஆட்டநாயகனாக கேப்டன் பும்ரா தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து இந்திய அணி கேப்டன் பும்ரா பேசும் போது, இந்த வெற்றியும் என் பந்துவீச்சும் மகிழ்ச்சியை கொடுக்கிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியில் அதிக செஷன்களில் பந்துவீசி பயிற்சி மேற்கொண்டிருக்கிறேன். அதனால் புதிதாக ஒன்றை செய்வது போல் எந்த சூழலிலும் தோன்றவில்லை. சர்வதேச கிரிக்கெட்டை மிஸ் செய்ததாகவும் தோன்றவில்லை.
நிச்சயம் பயிற்சியாளர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் ஆகியோருக்கு நன்றி கூற வேண் டும். கேப்டனாக இருக்கும் போது என்னை பற்றி மட்டும் சிந்திக்காமல், மற்ற வீரர்களை பற்றி சிந்திக்க வேண்டும். முதல்முறை டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக களமிறங்கியதால் எந்த அழுத்தமும் ஏற்படவில்லை. மகிழ்ச்சியாக தான் இருக்கிறேன்.
பிட்ச்சில் கொஞ்சம் ஸ்விங் இருந்ததை அறிந்திருந்தோம். அதனை முதல் சில ஓவர்களிலேயே பயன்படுத்த நினைத்தோம். நல்லவேளையாக டாஸ் வென்ற பந்துவீசியது சாதகமாக அமைந்தது. அதேபோல் வானிலையும் சாதகமாக இருந்தது. சில சோதனைகளுக்கு பின் அயர்லாந்து அணி சிறப்பாக பேட்டிங் செய்ததுய். சில நேரங்களில் வெற்றிபெறும் போது கூட, நாம் சில பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியதாக இருக்கும்.
அதனை அடுத்த போட்டியில் சரி செய்வோம். இந்திய அணியின் ஒவ்வொரு வீரரும் உறுதியாக இருக்கிறார்கள். சிறப்பாக தயாராகி வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் விளையாடுவது இந்திய வீரர்களுக்கு உதவியாக உள்ளது. எங்கு சென்றாலும் மக்கள் ஆதரவு இருக்கும். இன்றையப் போட்டியில் நல்ல ஆதரவு இருந்தது மகிழ்ச்சியாக உள்ளதாக தெரிவித்தார்.