- Advertisement 3-
Homeவிளையாட்டுஅப்ரிடியோட பவுலிங்க புரிஞ்சிக்கவே முடியல போல.. பார்க்கவே பரிதாபமா இருக்கு.. ரோகித் மீது அக்தர் கடுமையான...

அப்ரிடியோட பவுலிங்க புரிஞ்சிக்கவே முடியல போல.. பார்க்கவே பரிதாபமா இருக்கு.. ரோகித் மீது அக்தர் கடுமையான விமர்சனம்

- Advertisement 1-

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி. இடதுகை வேகப்பந்துவீச்சாளரான ஷாகின் அப்ரிடி 23 வயதிற்குள்ளாகவே, சர்வதேச கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தி அசத்தி இருக்கிறார். தற்போதைய பந்துவீச்சாளர்களில் ஷாகின் அப்ரிடி அளவிற்கு ஸ்விங் செய்து பவர் பிளே ஓவர்களில் விக்கெட் வீழ்த்தும் வீரர்கள் மிகவும் குறைவு என்றே சொல்லலாம்.

அதேபோல் இந்தியாவில் சிறந்த இடதுகை பந்துவீச்சாளர்கள் இல்லாததால், இந்திய பேட்ஸ்மேன்கள் போதுமான பயிற்சியை பெற முடியாமல் உள்ளது. இதனால் காரணமாக விராட் கோலி, ரோகித் சர்மா தொடங்கி அனைத்து வலது கை பேட்ஸ்மேன்களுக்கும் ஸ்விங் பந்துகளை எதிர்கொள்வதில் சிரமங்கள் உள்ளது.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவருமே போல்டாகி ஆட்டமிழந்தனர். குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு வீசப்பட்ட இன்ஸ்விங்கரை கணிக்க கூட முடியாமல் ஆட்டமிழந்த புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் ஜாம்பவான் சோயப் அக்தர் தனது யூட்யூப் சேனலில் பேசி இருக்கிறார். அதில், ஷாகின் அப்ரிடி மிரட்டலான ஸ்பெல்லை வீசினார் என்றே சொல்ல வேண்டும். அவரால் பந்தை சரியான இடத்தில் பிட்ச் செய்து ஸ்விங் செய்ய முடியும் என்பதை அனைவரும் அறிவர். வழக்கமாக செய்வதை தான் ஷாகின் அப்ரிடி செய்தார்.

- Advertisement 2-

ஆனால் ரோகித் சர்மாவிடம் அந்த பந்திற்கு கூட பதில் இல்லை. ஷாகின் அப்ரிடியை ரோகித் சர்மா 2022ஆம் ஆண்டு தான் கடைசியாக எதிர்கொண்டார். இதனால் ஷாகின் அப்ரிடியை அடிக்கடி எதிர்கொள்ளும் வாய்ப்பும் ரோகித் சர்மாவுக்கு கிடைக்கவில்லை. எனக்கு தெரிந்த வரை, ரோகித் சர்மாவால் ஷாகின் அப்ரிடி பந்துவீச்சை கணிக்க முடியும் என்று நினைக்கவில்லை.

ரோகித் சர்மா போல்டான காட்சியை பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. ரோகித் சர்மா நிச்சயம் சிறந்த வீரர். அவரால் சிறப்பாக பேட்டிங் செய்ய முடியும் என்ற போதும், ஏன் ஷாகின் அப்ரிடியை நினைத்து கவலைப்படுகிறார் என்பது தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்திய அணியின் டாப் ஆர்டர் மீது ஆதிக்கம் செலுத்தியது அந்நாட்டு கிரிக்கெட்டர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்