Homeகிரிக்கெட்சுப்மன் கில் கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கன்.. ஃபிட்னஸ் பத்தியும் பேசினன்... யுவி கொடுத்த ஸ்பெஷல்...

சுப்மன் கில் கிட்ட இதெல்லாம் சொல்லி இருக்கன்.. ஃபிட்னஸ் பத்தியும் பேசினன்… யுவி கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்.

-Advertisement-

கடந்த சில ஆண்டுகளில் இந்திய அணியில் நட்சத்திர அந்தஸ்துக்கு சென்றவர் சுப்மன் கில். 3 வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடி இந்திய அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக மாறினார். ஆசிய கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய சுப்மன் கில், அதிக ரன்கள் விளாசிய வீரர்களில் முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

இதனால் உலகக்கோப்பை தொடரில் சுப்மன் கில்லின் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் என்று எதிர்பார்ப்பக்கப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டிக்கு முன்பாகவே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார் சுப்மன் கில். இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டி மட்டுமல்லாமல் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியிலும் விளையாட முடியவில்லை.

-Advertisement-

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன் கில் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதன்பின் நேற்றிரவு புறப்பட்டு அகமதாபாத் சென்ற சுப்மன் கில், இன்று பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் விளையாட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.

சுப்மன் கில் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படங்களும் வைரலாகின. ஆனால் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டு வருவதர்ட்கு குறைந்தது 15 நாட்களாகும் என்று சொல்லப்படுகிறது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தை சுப்மன் கில் தவறவிட அதிக வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

-Advertisement-

தற்போது இந்தியா – பாகிஸ்தான் ஆட்டத்தில் சுப்மன் கில் இருப்பார் என்று முன்னாள் வீரர் யுவராஜ் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து யுவராஜ் சிங் பேசும் போது, சுப்மன் கில்லுக்கு மன ரீதியாக நம்பிக்கை கொடுத்திருக்கிறேன். கேன்சருடன் போராடிய போதும் உலகக்கோப்பை தொடரில் விளையாடினேன். அதற்காக ஃபிட்னஸை எட்டி உடனடியாக இந்திய அணியிலும் இணைந்தேன் என்று கூறி இருக்கிறேன்.

அதனால் சுப்மன் கில்லும் என்னை போல் நிச்சயம் இந்திய அணிக்காக உலகக்கோப்பையில் விரைவாக விளையாடுவார். நிச்சயம் டெங்கு அல்லது காய்ச்சலால் பாதிக்கப்பட்டால், கிரிக்கெட் விளையாடுவது சாதாரணமாக இருக்காது. அதனை நான் அனுபவம் மூலமாக சொல்லுகிறேன். சுப்மன் கில் நிச்சயம் ஃபிடனஸை எட்டி இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் விளையாடுவார் என்ற நம்பிக்கை உள்ளதாக தெரிவித்துளளார்.

-Advertisement-

சற்று முன்