ரொம்ப ஓவரா கொண்டாடிட்டாங்க.. கோலியை பத்தி எனக்கு தெரியும்… இனி எவன் வந்தாலும் காலி – ஸ்ரீசாந்த் பேச்சு

- Advertisement -

இந்தியா பாகிஸ்தான் இடையேயான ஆசியக் கோப்பையின் முதல் போட்டி கடந்த இரண்டாம் தேதி நடைபெற்றது. மழை காரணமாக இந்த போட்டி நிறுத்தப்பட்டதால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். ஆனால் இந்திய அணி பேட்டிங்கில் பெருமளவு சொதப்பியது என்றே கூற வேண்டும்.

இஷான் கிஷன் மற்றும் ஹர்திக் பாண்டியா இல்லையென்றால் இந்திய அணியின் ரன் அகல பாதாளத்தில் இருந்திருக்கும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலியும் இந்த போட்டியில் பெரிய அளவில் ரன்களை குவிக்கவில்லை. அதிலும் அவர் ஷஹீம் அப்ரிடி வீசிய பந்தை அடிக்க முயன்ற போது இன்சைட் எட்ஜ் பட்டு போல்டு ஆனார். இது இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

அதே சமயம் பாகிஸ்தான் வீரர்கள் விராட் கோலியின் விக்கெட்டை பெரிய அளவில் கொண்டாடி தீர்த்தார்கள். இந்த நிலையில் விராட் கோலியின் அவுட் மற்றும் ரோஹித் சர்மாவின் செயல்பாடு குறித்து முன்னாள் இந்திய வீரரான ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில்,

“இந்தியாவிற்கு இது துரதிர்ஷ்டவசமானது. பாகிஸ்தான் அணி அதிர்ஷ்டத்தால் விராட் கோலியின் வீக்கத்தை எடுத்தது காரணம் அது ஒரு இன்சைட் எட்ஜ். அதை ஒரு விக்கெட் ஆகவே என்னால் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது. எனக்கு விராட் கோலியை நன்கு தெரியும், அவருடைய விக்கட்டை பாகிஸ்தான் வீரர்கள் பெருமளவில் கொண்டாடிய போது அவருடைய மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்திருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இந்தியா பாகிஸ்தான் இடையேயான அடுத்த போட்டிக்காக நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன்.

- Advertisement -

அதேசமயம் லெப்ட் ஆம் பேசர்களை எதிர்கொள்ள ரோகித் சர்மா எப்போதும் சிரமப்பட்டுள்ளார் என்று நான் கூற மாட்டேன். ஒருவர் சிறந்த பார்மல் இருக்கும்போது அனைத்தும் சிறப்பாக நடக்கும். ரோகித் சர்மா தன்னுடைய ஆட்டத்தை சிறப்பாகவே துவங்கினார். எதிரணி வீரர்கள் சிறப்பாக பந்து வீசியும் அவர் அதை நன்கு எதிர்கொண்டார்.

கோலி, ரோஹித் சர்மா என இருவருமே நன்றாகவே ஆடினர். கோலியின் கவர் டிரைவை பார்க்கையில் அவர் நிச்சயம் சதம் அடிப்பார் என்று எண்ணினேன். அடுத்த போட்டிக்காக காத்திருப்போம். எந்த ஒரு லெப்ட் ஆம் பேசர் வந்தாலும் கண்டிப்பாக விராட் கோலி அவரது பந்தை அடித்து துவம்சம் செய்வார் என்று ஸ்ரீசாந்த் கூறியுள்ளார். அடுத்ததாக குரூப் 4 சுற்றில் இந்தியா பாகிஸ்தான் அணி செப்டம்பர் 10ஆம் தேதி மோத உள்ளது. அந்த போட்டிக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக்கொண்டுள்ளனர்.

- Advertisement -

சற்று முன்