- Advertisement 3-
Homeவிளையாட்டுஉ.கே அணியில இது ஒரு குறையாவே இருக்கு... அவர நீங்க எடுத்து இருக்கலாம்... அப்படி இல்லாட்டி...

உ.கே அணியில இது ஒரு குறையாவே இருக்கு… அவர நீங்க எடுத்து இருக்கலாம்… அப்படி இல்லாட்டி அட்லீஸ்ட் இவரையாவது எடுப்பிங்கனு நெனச்சன் – யுவராஜ் பேச்சு

- Advertisement 1-

உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று மாலை உறுதி செய்யப்பட்டது. அந்த அணியில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் இடம்பிடித்தார். ஆசிய கோப்பை தொடரின் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் காயமடைந்த அக்சர் படேல் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

இதன் காரணமாக இந்திய அணியில் 3 ஸ்பின்னர்களும் 3 வெரைட்டியில் பந்துவீசும் தன்மை கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஜடேஜா இடதுகை சுழற்பந்துவீச்சாளராகவும், குல்தீப் யாதவ் மிஸ்ட்ரி ஸ்பின்னராகவும், அஸ்வின் ஆஃப் ஸ்பின்னராகவும் இருப்பதால், இந்திய அணியின் பலம் கூடுதல் பலம் பெற்றுள்ளது.

ஏனென்றால் இடதுகை பேட்ஸ்மேன்களை எளிதாக வீழ்த்தும் திறமை அஸ்வினுக்கு இருப்பதால், இந்திய அணி தைரியமாக 3 ஸ்பின்னர்களுடன் களமிறங்கலாம். அதேபோல் பும்ரா, சிராஜ் மற்றும் 3வது வேகப்பந்துவீச்சாளராக ஹர்திக் பாண்டியா என்றும் இந்திய அணி 6 பவுலர்களுடன் களமிறங்கலாம்.

தேவைக்கேற்ப அஸ்வின் மற்றும் ஷர்துல் தாக்கூர் இருவரையும் பயன்படுத்த முடியும் என்பதால் இந்திய அணி ஆடுகளத்திற்கேற்ப பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்ய முடியும். இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் யுவராஜ் சிங் கருத்து தெரிவித்துள்ளார்.

- Advertisement 2-

அதில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹல் மட்டுமே மிஸ் செய்யப்பட்டதாக உணர்கிறேன். அதேபோல் லெக் ஸ்பின்னர் மட்டுமே இந்திய அணியில் இல்லை. சாஹலை தேர்வு செய்யவில்லை என்பதால், நிச்சயம் வாஷிங்டன் சுந்தர் தேர்வு செய்யப்படுவார் என்று நம்பிக்கையாக இருந்தேன்.

ஆனால் இந்திய அணிக்கு அனுபவம் வாய்ந்த வீரர் தேவையாக இருக்கிறார். அதன் காரணமாகவே ரவிச்சந்திரன் அஸ்வின் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இந்திய அணிக்காக 2017ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சாஹல், இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக்கோப்பை மற்றும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்