- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியாவிற்கு எதிரான போட்டியில் என்னை தேர்வு செய்யல... அணிக்காக சிலதை ஒத்துக்கிட்டே ஆகணும் - ஷஹீன்...

இந்தியாவிற்கு எதிரான போட்டியில் என்னை தேர்வு செய்யல… அணிக்காக சிலதை ஒத்துக்கிட்டே ஆகணும் – ஷஹீன் ஷா அப்ரிடி பேச்சு

- Advertisement-

அண்மையில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை அடுத்தடுத்து ஓவர்களில் வீழ்த்தி அசத்தியவர் ஷாகின் அப்ரிடி. 23 வயதிலேயே பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவராக மாறிவிட்டார். இந்த நிலையில் முதல்முறையாக இந்திய மண்ணில் விளையாட உள்ளார்.

உலகக்கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் அணி 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியா வந்திருக்கிறது. இதனால் இந்திய மண்ணில் முத்திரை பதிக்க ஷாகின் அப்ரிடி தீவிரமாக இருக்கிறார். இந்த உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணியின் முன்னணி வீரராக உள்ள ஷாகின் அப்ரிடி, கடந்த உலகக்கோப்பை இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட தேர்வு செய்யப்படவில்லை.

- Advertisements -

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆடிய போட்டியில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களாக முகமது அமீர், வஹாப் ரியாஸ் மற்றும் ஹசன் அலி ஆகியோர் களமிறங்கினர். இருப்பினும் இந்திய அணி 336 ரன்கள் குவித்து. இதன் காரணமாக 89 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோல்வியடைந்தது.

இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட முடியாத சோகத்தை ஷாகின் அப்ரிடி வெளிப்படுத்தியுள்ளார். ஷாகின் அப்ரிடி பேசும் போது, இந்திய அணிக்கு எதிரான போட்டியில் விளையாட நான் தேர்வு செய்யப்படவில்லை. முந்தைய நாள் இரவு வரை பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் நான் இருந்தேன். ஆனால் டாஸ் போடும் போது கடைசி நேரத்தில் அணியில் இருந்து மாற்றப்பட்டேன்.

- Advertisement-

அது அணி நிர்வாகத்தின் முடிவு என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. சிறந்த பவுலர்களுடன் விளையாட வேண்டும். ஆனால் நிச்சயம் அந்தப் போட்டியில் விளையாட முடியாதது மிகப்பெரிய ஏமாற்றம் தான். முந்தைய போட்டியில் நான் சிறப்பாக விளையாடி இருந்தேன். அதனால் என்னை அணியில் இருந்து நீக்கியது கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் சில முடிவுகளை ஏற்ற்கொள்ள வேண்டும்.

அந்த போட்டியில் நாங்கள் தோல்வியடைந்தோம். ஆனாலும் கடைசி வரை அரையிறுதிக்கு முன்னேற வேண்டும் என்று முயற்சித்தோம். ஆனால் சில போட்டிகளின் முடிவுகள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பவுலிங் வீச தொடங்குவதற்கு முன்பாகவே நாங்கள் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டோம். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு போட்டியையும் இறுதிப்போட்டியை போல் விளையாட வேண்டும். அதனால் வங்கதேச போட்டியிலும் சிறப்பாகவே விளையாடினோம் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்