- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs AUS : நான் ரொம்ப பதட்டமாகிட்டன்.. இதை இப்படி செய்யவே கூடாது.. ஒரு...

IND vs AUS : நான் ரொம்ப பதட்டமாகிட்டன்.. இதை இப்படி செய்யவே கூடாது.. ஒரு அணியா எங்களுக்கு சவால் தான் – வெற்றிக்கு பின் ரோகித் சர்மா பேச்சு

- Advertisement-

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 199 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஒரு வீரர் கூட ஆஸ்திரேலிய அணி தரப்பில் அரைசதம் அடிக்கவில்லை. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

இதன்பின் களமிறங்கிய இந்திய அணி 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் விராட் கோலி – கேஎல் ராகுல் இணைந்து இந்திய அணி வழிநடத்தி வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். கேஎல் ராகுல் 97 ரன்களும், விராட் கோலி 85 ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியின் ஆட்டநாயகனாக கேஎல் ராகுல் தேர்வு செய்யப்பட்டார்.

- Advertisements -

இந்த வெற்றிக்கு பின் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசும் போது, ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வெற்றி நல்ல உணர்வை கொடுக்கிறது. உலகக்கோப்பை தொடரிலும் இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. ஃபீல்டிங்கின் போது அனைத்து வீரர்களும் சிறப்பாக செயல்பட்டனர். இதுபோன்ற சூழல்கள் எப்போதுமே கடினமாக இருக்கும். ஆனால் சேப்பாக்கம் ஆடுகள சூழலை பவுலர்கள் சிறப்பாக பயன்படுத்தி கொண்டனர்.

ஸ்பின்னர்களுக்கு ஏந்த அளவிற்கு ஆடுகளம் உதவியாக இருந்ததோ, அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ரிவர்ஸ் ஸ்விங்காகியது. பேட்டிங்கின் போது நான் பதற்றமாக இருந்தேன். இன்னிங்ஸை அப்படி தொடங்கவே கூடாது. ஆஸ்திரேலிய பவுலர்களை பாராட்ட வேண்டும். ஆனால் நாங்களும் மோசமான ஷாட்களை ஆடி இருக்கிறோம்.

- Advertisement-

இதுபோன்ற இலக்குகளை நிர்ணயிக்கப்பட்டாலும், பவர்பிளே ஓவர்களில் எவ்வளவு ரன்களை விளாச முடியுமோ, விளாச வேண்டும். நிச்சயம் விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் இருவரையும் பாராட்டியாக வேண்டும். ஒவ்வொரு போட்டிக்கும் ஒவ்வொரு ஆடுகளம், ஒவ்வொரு சூழல் என்று திட்டத்திற்கு நாங்கள் வேகமாக பொருந்தி போக வேண்டும். அணியாக அது எங்களுக்கு மிகப்பெரிய சவால்.

அதேபோல் சூழல்களுக்கு ஏற்றவாறு வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு விளையாடுவார்கள். சென்னை சேப்பாக்கம் மைதானத்த்ல் ரசிகர்கள் எப்போதும் எங்களை கைவிட்டதில்லை. அவர்கள் எப்போதும் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள். இந்த வெப்பத்திலும் இந்திய அணிக்கு ஆதரவளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

சற்று முன்