எனக்கு வருத்தம்பா.. நாங்க இதுல செமயா சொதப்பிட்டோம்.. வெற்றிக்கு பின் புலம்பித் தள்ளிய ரோகித் சர்மா

- Advertisement -

நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டிஎல்எஸ் முறைப்படி வெற்றிபெற்றது. இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 59 பந்துகளில் 74 ரன்களும், சுப்மன் கில் 61 பந்துகளில் 63 ரன்களும் விளாசினர். இந்த வெற்றியின் மூலமாக இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளது. அதேபோல் இந்தப் போட்டியில் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றி குறித்து ரோகித் சர்மா பேசும் போது, எனது பேட்டிங்கை நினைத்து நிச்சயம் முழுமையாக மகிழ்ச்சியடையவில்லை. ஏனென்றால் தொடக்கத்தில் சில ஓவர்கள் மோசமான பேட்டிங் செய்தேன். ஆனால் சரியாக பந்தை கணிக்க தொடங்கியதில் இருந்து அணியை வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.

- Advertisement -

அதேபோல் அந்த பிளிக் ஸ்வீப் ஷாட் எதிர்பாராமல் அடிக்கப்ப்பட்ட ஒன்றாகும். நான் ஷாட் ஃபைன் லெக் திசையில் பந்தை அடிக்க நினைத்தேன். ஆனால் அது சிக்சருக்கு சென்று விழுந்தது என்று கூறினார். தொடர்ந்து உலகக்கோப்பை அணி தேர்வு பற்றிய கேள்விக்கு, நாங்கள் இலங்கை வருவதற்கு முன்பாக உலகக்கோப்பை அணி எப்படி அமையும் என்பது தெரியும்.

ஏனென்றால் வெறும் 2 போட்டிகளில் எதையும் முடிவு செய்திட முடியாது என்பதை அறிந்து செயல்பட்டோம். ஆனால் அதிர்ஷ்டவசமாக முதல் போட்டியில் முழுமையாக பேட்டிங்கும், இரண்டாம் போட்டியில் முழுமையாக பவுலிங்கும் செய்தோம். இதன் மூலம் ஒரு முழு போட்டியை ஆடியதாக நினைக்கிறேன். இன்னும் ஏராளமான பிரச்சனைகளை சரி செய்ய வேண்டியுள்ளது.

- Advertisement -

இந்திய அணியின் ஏராளமான வீரர்கள் காயத்தில் இருந்து நீண்ட மாதங்களுக்கு பின் அணிக்கு மீண்டும் திரும்பி இருக்கிறார்கள். அவர்கள் ஃபார்முக்கு வருவதற்கான நேரம் வேண்டும். முதல் போட்டியில் ஹர்திக் மற்றும் இஷான் இருவரும் சிறப்பாக பேட்டிங் செய்து, நல்ல ஸ்கோருக்கு அணியை கொண்டு சென்றனர்.

இந்தப் போட்டியில் எங்களின் பவுலிங் மோசமாக இல்லை என்றாலும், ஃபீல்டிங் மிகவும் மோசமாக அமைந்தது. அதில் கவனம் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். இது போன்றெல்லாம் சூப்பர் 4 லெவெலில் செயல்பட கூடாது என்று கூறியுள்ளார். உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரோகித் சர்மாவின் பேச்சு ரசிகர்களிடையே சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

சற்று முன்