- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணியின் போட்டி கட்டணத்தில் கை வைத்த ஐசிசி. அதுலயும் சுப்மன் கில்லுக்கு மட்டும் கொஞ்சம்...

இந்திய அணியின் போட்டி கட்டணத்தில் கை வைத்த ஐசிசி. அதுலயும் சுப்மன் கில்லுக்கு மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல் ஐட்டமா இருக்கு.

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பலரது விமர்சனங்களையும் பெரும் வகையில் மிக மோசமான ஒரு தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் இந்திய ரசிகர்கள் தோனியை நினைவு கூர்ந்து, அவர் இருந்த வரை எல்லாமே நன்றாக இருந்தது என்று கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நடந்த சிலவற்றுக்காக ஐசிசி சில அபராதங்களை விதித்துள்ளது. அதன் படி சுப்மன் கில் தனது போட்டிக்கான கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும் என்று ஐசிசி கூறி உள்ளது.

இதற்க்கு காரணம் அவர் போட்ட ட்வீட் தான். இரண்டாவது இன்னிங்கில் அவர் 18 ரன்கள் அடித்திருந்து நிலையில், ஸ்காட் போலண்ட் வீசிய பந்தை அவர் அடிக்க முயன்ற போது அது எட்ஜ் வாங்கி கேமரூன் கிரீன் இருக்கும் பக்கம் சென்றது. அவர் அந்த பந்தை தாவி பிடித்தார். அப்போது முடிவு டிவி அம்பயரிடம் சென்றது.

இரண்டு, மூன்று ஆங்கிள்களை பார்த்த டிவி அம்பயர் அதை அவுட் என அறிவித்தார். இதனால் கில் களத்தில் இருந்து வெளியேறினார். அப்போது அவருடன் களத்தில் இருந்தவர் ரோஹித் சர்மா தான். அவரும் தனது அதிருப்தியை களத்தில் இருந்தபடியே வெளிப்படுத்தினார். இந்த நிலையில் இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது.

- Advertisement-

அது மட்டும் அல்லாது, சுப்மன் கில் இது குறித்த தனது கருத்தை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டார். அதில் அவர், டிவி அம்பயர்களின் முடிவை விமர்சிக்கும் வகையில் தலையில் அடித்துக்கொள்ளும் எமோஜியோடு ஒரு டீவீட்டை பதிவிட்டார். அத்தகைய விமர்சனத்திக்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதே வலையில் இந்திய அணிக்கும் ஸ்லோ ஓவர் ரேட்-காக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 5 ஓவர்கள் மெதுவாக வீசிய காரணத்திற்காக இந்திய அணி தங்களது முழு போட்டி கட்டணத்தையும் அபராதமாக செலுத்தவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல ஆஸ்திரேலிய அணி 4 ஓவர்கள் மெதுவாக வீசிய காரணத்தால் அவர்களுக்கு போட்டி கட்டணத்தில் 80% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: எதுக்கு எல்லாத்துக்கும் தோனி தோனினு கூவரிங்க. மத்தவங்க எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா? எல்லாரோடு உழைப்பும் தான் இதுல இருக்கு – ஹர்பஜன் சிங் பேச்சு

இதெல்லாம் ஒருபுறம் இருக்க, ரோகித் ஷர்மாவும் தற்போது அம்பயர்களை விமர்சிக்கும் வகையில் பேசியுள்ளது குறிப்பிடத்தள்ளது. அவருக்கும் இதனால் ஏதேனும் அபராதம் விதிக்கப்படுமா என்பது தெரியவில்லை.

சற்று முன்