- Advertisement -
Homeவிளையாட்டுநேற்று வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல் கோலிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. பாபர் ஆசாமுக்கு...

நேற்று வெளியான ஐசிசி தரவரிசை பட்டியல் கோலிக்கு ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது. பாபர் ஆசாமுக்கு நல்ல இடம் தான்.

- Advertisement-

ஐசிசி என்று அழைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த தரவரிசை என்பது இந்திய அணியின் ரன் மெஷின் என்று அழைக்கப்படும் விராட் கோலிக்கு நிச்சயம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்துள்ளது என்றே கூறலாம். காரணம் அவர் அந்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் கூட இல்லை என்பது தான்.

விராட் கோலி மட்டும் அல்ல, இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மாவும் இந்த தரவரிசையில் முதல் 10 இடங்களில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இடம் பெற்ற ஒரே இந்திய வீரர் ரிஷப் பன்ட் மட்டுமே. அவர் விபத்து காரணமாக கடந்த 6 மாதங்களாக எந்த ஒரு போட்டியிலும் விளையாட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவர் தனது காயங்களில் இருந்து படிப்படியாக மீண்டு வந்துகொண்டிருக்கிறார்.

இன்று வெளியான இந்த தரவரிசைப்படி ஏற்கனவே முதல் இடம் பிடித்திருந்த மார்னஸ் லபுஷேனை பின்னுக்கு தள்ளி, முதல் இடம் பிடித்தார் ஜோ ரூட். கடந்த 6 மாதங்களாக மார்னஸ் லபுஷேன் முதலிடம் பிடித்திருந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆஷஸ் டெஸ்டில் ஜோ ரரூட்டில் அபார ஆட்டம் காரணமாக அவர் 887 புள்ளிகளோடு முதல் இடத்தை எட்டி உள்ளார்.

இந்த பட்டியலில் 883 புள்ளிகளோடு இரண்டாம் இடத்தில் உள்ளார் கேன் வில்லியம்சன். அதே போல மூன்றாம் இடத்தில் உள்ளார் மார்னஸ் லபுஷேன். இதில் ஸ்டீவ் ஸ்மித், லபுஷேன், டிராவிஸ் ஹெட் ஆகிய மூவரும் சரிவை கண்டுள்ளனர். இதற்கு முன்பு இரண்டாவது இடத்தில் இருந்த ஸ்மித் 6வது இடத்தையும் டிராவிஸ் ஒரு இடம் சரிந்து நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். இதில் பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 862 புள்ளிகளோடு 5வது இடத்தில் உள்ளார். அவர் ஒரு இடம் சரிந்துள்ளார். ரிஷப் பன்ட் 758 புள்ளிகளோடு 10வது இடத்தில் உள்ளார்.

- Advertisement-

கோலியை பொறுத்தவரை அவர் உலக டெஸ்ட் பைனலில் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரின் ஆட்டம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. முதல் இன்னிங்சில் 14 ரன்களும் 2வது இன்னிங்சில் 49 ரன்களும் மட்டுமே அவர் அணிக்காக சேர்த்தார். கோலி மட்டும் இன்றி இந்திய வீரர்கள் யாரும் அதில் சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் சேர்க்கவில்லை என்பதால் முக்கியமான அந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இதவுரை கோலி மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் 822 ரன்களை எடுத்துள்ளார். அடுத்த மாதம் அந்த அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஒருவேளை அவர் 188 ரன்கள் எடுத்தால், அந்த அணிக்கு எதிராக 1000 ரன்களை எடுத்த 11வது இந்திய வீரர் என்ற பெருமை அவரை சாரும். ஐசிசி தரவரிசை பட்டியலை பொறுத்தவரை கோலி 700 புள்ளிகளோடு 14வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்