- Advertisement 3-
Homeவிளையாட்டுடெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த அணிக்கும் கிடைக்காத பெருமை.. ரோஹித், கோலி படைத்த சரித்திரம்..

டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் எந்த அணிக்கும் கிடைக்காத பெருமை.. ரோஹித், கோலி படைத்த சரித்திரம்..

- Advertisement-

உலக அளவில் பல இடங்களில் கிரிக்கெட் தொடர்கள் அடுத்தடுத்து நடைபெற்று வருவதால் எப்போதும் ஐசிசி தரவரிசை பட்டியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கும். அந்த வகையில் தற்போதும் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டி முடிவடைந்த பின்னர் சில முக்கியமான மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.

சமீப காலமாக டெஸ்ட், ஒரு நாள் மற்றும் டி20 என அனைத்து தரவரிசை பட்டியலிலும் இந்திய அணியும், இந்திய அணியில் உள்ள வீரர்களும் மிக முக்கியமான இடத்தை பிடித்து வருகின்றனர். டெஸ்ட் அணிகளின் தரவரிசை பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்திய அணி, ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

- Advertisements -

நீண்ட நாட்களாக இந்த இடத்தையும் அவர்கள் தக்க வைத்துக் கொண்டுள்ள நிலையில் ஒருநாள் தரவரிசை பேட்ஸ்மேன்களில் கூட ரோஹித் ஷர்மா, கில் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளனர். இதே போல டி20 பேட்டிங் தரவரிசையிலும் இரண்டாவது இடத்தில் சூர்யகுமார் யாதவும், நான்காவது இடத்தில் ஜெய்ஸ்வாலும், எட்டாவது இடத்தில் ருத்துராஜூம் உள்ளனர்.

பந்து வீச்சிலும் டெஸ்ட் தரவரிசை பட்டியலில் அஸ்வின் முதலிடத்தில் இருக்க, பும்ரா மூன்றாவது இடத்தையும், ஜடேஜா ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளனர். ஒரு நாள் போட்டி பந்து வீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் நான்காவது இடத்தில் குல்தீப்பும், எட்டாவது இடத்தில் பும்ராவும் இருக்க இப்படி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியா மற்றும் இந்திய வீரர்களின் தாக்கம் மிக மிக பெரிதாக உள்ளது.

- Advertisement-

அந்த வகையில் சமீபத்தில் டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஏற்பட்ட மாற்றம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. பங்களாதேஷுக்கு எதிரான டெஸ்டில் அதிர்ச்சி தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, பரிதாபமாக ஏமாந்து போக, அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் மூன்றாவது இடத்தில் இருந்து சரசரவென 6 இடங்கள் இறங்கி உள்ளார்.

இதனால் மூன்றாவது இடத்தில் இருந்து நேராக 9 வது இடத்திற்கு இறங்கி பின்னடைவ பாபர் அசாம் சந்திக்க, இந்திய வீரர்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர். ரோஹித் ஷர்மா, ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையை 6, 7 மற்றும் 8 வது இடங்களை பிடித்துள்ள சூழலில் சிறப்பான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது.

அதாவது, டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் முதல் 10 பேரில் இந்திய வீரர்கள் மட்டும் தான் 3 பேர் இடம்பிடித்துள்ளனர். மற்ற எந்த அணிகளில் இருந்தும் 3 வீரர்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்