- Advertisement -
Homeவிளையாட்டுWorld cup 2023 : இந்திய அணி வெல்ல ஐசிசி இந்த குறிக்கு வழியை செய்யும்......

World cup 2023 : இந்திய அணி வெல்ல ஐசிசி இந்த குறிக்கு வழியை செய்யும்… செமி பைனல் மற்றும் பைனலில் இது நடக்கும் – சேவாக் அதிரடி கருத்து

- Advertisement-

இந்த வருடம் உலக கோப்பை போட்டியானது இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இதில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற ஆவல் ரசிகர்களிடம் நிலம் வருகிறது. அதே போல பல வருடங்கள் கழித்து பாக்கிஸ்தான் அணி இந்தியா வந்துள்ளதால் அந்த குறிப்பிட்ட போட்டிகளுக்கான ஆவலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

முன்னாள் வீரர்கள் பலர் இந்த தொடரில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்ற கருத்தை தெரிவித்து வரும் நிலையில் சோசியல் மீடியாக்களில் அதிகம் ஆக்டிவாக இருக்கும் இந்திய முன்னாள் வீரர் விரேந்திர சேவாக்கம் பல விதமான கருத்துக்களை அவ்வவ்போது தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் கூறிய கருத்து ஒன்று மிகவும் உற்று நோக்கி பார்க்கப்படுகிறது. கிரிக்பஸ் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், இந்த வருடம் உலக கோப்பையை இந்தியா தான் வெல்லும் அதற்கு ஐசிசி துணை புரியும் என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார். அவர் கூறியுள்ளது பின்வருமாறு.

“இந்த நிகழ்ச்சியின் ப்ரொடியூசர் என்னுடைய கருத்தை நிச்சயம் எடிட் செய்து விடுவார் என்று எனக்குத் தெரியும் ஆனாலும் கூறுகிறேன். ஐசிசி இந்த முறை இந்தியா உலக கோப்பையை வெல்ல துணை புரியும். லோக்கல் மைதான ஊழியர்களைக் கொண்டு தான் பிட்ச் தயாரிக்கப்படும். அதில் சில சூட்சுமங்கள் இருக்கிறது.

- Advertisement-

இந்தியா பைனல் வரை செல்வதன் மூலம் ரேட்டிங்ஸ் அதிக அளவில் அதிகரிக்கும். அது ஐசிஐசிக்கு நல்லது. செமி பைனல் மற்றும் பைனலுக்கு தயாரிக்கப்படும் பிட்ச் இந்திய அணி வீரர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்படும் என்று சேவாக் கூறியுள்ளார்”.

ஏற்கனவே அஸ்வின், மைதான ஊழியர்களிடம் பேசி பிட்சை தனக்கு சாதகமாக மாற்றுவார், அதன் காரணமாக தான் இந்தியாவில் அவருடைய பவுலிங் எடுபடுகிறது என்று லட்சுமண் சிவராமகிருஷ்ணன் குற்றம் சாட்டி இருந்த நிலையில் சேவாக்கின் இந்த கருத்து தற்போது கவனத்தை பெற்றுள்ளது.

சற்று முன்