- Advertisement 3-
Homeவிளையாட்டு500 விக்கெட்டுகள்.. சாதிப்பாரா ரவிச்சந்திரன் அஸ்வின்.. மிஸ் பண்ணிராதப்பா.. அப்றம் 6 மாசமாகும்!

500 விக்கெட்டுகள்.. சாதிப்பாரா ரவிச்சந்திரன் அஸ்வின்.. மிஸ் பண்ணிராதப்பா.. அப்றம் 6 மாசமாகும்!

- Advertisement 1-

இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் நீண்ட மாதங்களாக நம்பர் 1 இடத்தில் உள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டர் தரவரிசையில் ஜடேஜாவுக்கு பின் இரண்டாவது இடத்தில் உள்ளார். இருப்பினும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.

5 இடதுகை பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய அணியில் இருந்தும் அஸ்வினை இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பிளேயிங் லெவனில் எடுக்கவில்லை. இதனால் இந்திய அணி படுதோல்வியை சந்தித்தது. இந்த விவகாரம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது, என்னுடன் விளையாடும் வீரர்களை நண்பர்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இனி உடன் பணியாற்றும் வீரர்களாகிவிட்டனர் என்று விரக்தியாக கூறினார்.

ஏன் தான் நான் பந்துவீச்சாளரானேன் என்று அஸ்வின் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இதன்பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் களமிறங்கிய அஸ்வின், தான் யார் என்று ஒரே போட்டியில் அனைவருக்கும் நிரூபித்து காட்டிவிட்டார். முதல் இன்னிங்ஸ் 7 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸ் 5 விக்கெட்டுகள் என்று மொத்தமாக 12 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனால் ரவிச்சந்திரன் அஸ்வினை எடுக்காமல் தவறு செய்த ரோகித் சர்மாவை ரசிகர்கள் காட்டமாக விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இந்தப் போட்டியில் அஸ்வின் சாதனை படைப்பதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

- Advertisement 2-

அதாவது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 93 போட்டிகளில் விளையாடியுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், இதுவரை 486 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதனால் இன்று தொடங்கும் டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 14 விக்கெட்டுகளை கைப்பற்றினால் அஸ்வின் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கலாம்.

எப்படியும் இந்த சாதனையை அஸ்வினால் எளிதாக எட்ட முடியும் என்றாலும், இந்த போட்டியில் சாதனையை படைக்க மிஸ் செய்தால், அடுத்ததாக 6 மாதங்களுக்கு காத்திருக்க வேண்டிய சூழல் வரும். ஏனென்றால் இந்திய அணி உலகக்கோப்பைத் தொடருக்கு பின்பே தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் தான் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்