- Advertisement 3-
Homeவிளையாட்டுசஞ்சு சம்சனுக்கு பதிலாக இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க... சும்மா கில்லி மாதிரி விளையாடுவான்... முன்னாள்...

சஞ்சு சம்சனுக்கு பதிலாக இந்த பையனுக்கு வாய்ப்பு கொடுங்க… சும்மா கில்லி மாதிரி விளையாடுவான்… முன்னாள் இந்திய வீரர் வலியுறுத்தல்

- Advertisement 1-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் மற்றும் பேக் அப் வீரர்களை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. குறிப்பாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் காயத்தில் இருந்து வந்தாலும், வரவில்லையென்றாலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரை தயார்ப்படுத்தி வருகிறது.

அதற்காகவே நடைபெற்று முடிந்த வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. அதில் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் சஞ்சு சாம்சன் டி20 தொடரில் கிடைத்த 3 வாய்ப்புகளிலும் ரன்கள் சேர்க்க தவறினார். மொத்தமாக 3 போட்டிகளில் களமிறங்கி 32 ரன்கள் மட்டும் சேர்த்துள்ளார்.

இதனால் சஞ்சு சாம்சனுக்கு இனி வாய்ப்பு வழங்கப்படாது என்று கருத்து நிலவி வருகிறது. இந்த நிலையில் சஞ்சு சாம்சன் பற்றி கொல்கத்தா அணியின்  துணை பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசும் போது, என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் எந்த வாய்ப்பை இழக்கவில்லை. அவருக்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். சஞ்சு சாம்சனின் சூழலில் நீங்கள் இருந்தால், நான் நம்பர் 6 பேட்ஸ்மேனா என்று கேள்வி எழுப்பி இருப்பீர்கள். அதேபோல் நம்பர் 6 வரிசையில் ஆடியிருக்கிறேனா என்று கேட்டிருப்பீர்கள்.

இது சஞ்சு சாம்சனுக்கு புதிய ரோல். 3 போட்டிகளில் விளையாடி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. வேண்டுமென்றால் கொடுத்த வாய்ப்பில் ஏன் ரன்கள் சேர்க்கவில்லை என்று மட்டுமே கேள்வி எழுப்ப முடியும். சஞ்சு சாம்சனை முழுமையாக பயன்படுத்த நினைத்தால், அவரை நம்பர் 3 வரிசையில் களமிறக்க வேண்டும். அந்த வரிசையில் களமிறங்கியே அதிக முறை சிறப்பாக விளையாடி இருக்கிறார். அங்கு களமிறக்க முடியவில்லை என்றால், அவருக்கு வாய்ப்பு கொடுக்க தேவையில்லை.

- Advertisement 2-

நம்பர் 5 அல்லது நம்பர் 6 பேட்டிங் வரிசையில் சஞ்சு சாம்சனை களமிறக்குவதற்கு பதில், ரிங்கு சிங்கையே களமிறக்கலாம். சஞ்சு சாம்சனால் பலமான சிக்சர்களை பவர் பிளே ஓவர்களிலும், ஸ்பின்னர்களையும் எதிர்த்து விளாச முடியும். அவருக்கு பேட்டிங் வரிசையில் களமிறக்காததால், நிச்சயம் அவருக்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்படும் என்றே நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்ததாக இந்திய அணி அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளது. அதில் சஞ்சு சாம்சன் மெயின் விக்கெட் கீப்பராகவும், ரிங்கு சிங் ஃபினிஷராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் சஞ்சு சாம்சன் மட்டுமல்லாமல் ரிங்கு சிங்கின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சற்று முன்