சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், க்ருனால் பாண்டியா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது.
மும்பை அணி சார்பாக கேமரூன் கிரீன் 41 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 33 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 183 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கிய லக்னோ அணியானது துவக்கத்திலேயே மேயர்ஸ் (18) மற்றும் மான்கட் (3) ஆகியோர் விக்கெட்டுகளை சொற்ப ரன்களில் இழந்தது.
பின்னர் வந்த க்ருனால் பாண்டியாவும் 8 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறியதால் போட்டி லக்னோ அணியின் கைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக செல்ல துவங்கியது. அந்த நேரத்தில் லக்னோ அணிக்கு ஆறுதலாக மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் மட்டும் ஒரு புறம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்.
27 பந்துகளை சந்தித்த அவர் 5 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என 40 ரன்கள் குவித்து இருந்த வேளையில் தீபக் ஹூடா செய்த ஒரு குளறுபடியால் ஆட்டம் இழந்து வெளியேற வேண்டியதாயிற்று. அந்த வகையில் ஒரு கட்டத்தில் லக்னோ அணிக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் விளையாடி வந்த அவரை தீபக் ஹூடா ரன் ஓடும்போது தவறுதலாக இடித்ததால் ஸ்டாய்னிஸ் தடுமாறினார். இதன் காரணமாக அவர் எளிதாக ரன் அவுட் செய்யப்பட்டார்.
அவரது இந்த விக்கெட் லக்னோ அணிக்கு பாதகத்தையும், மும்பை அணிக்கு சாதகத்தையும் ஏற்படுத்தியது. ஒருவேளை ஸ்டாய்னிஸ் அந்த ரன் அவுட்டில் ஆட்டம் இழக்காமல் இருந்திருந்தால் நிச்சயம் லக்னோ அணி இவ்வளவு மோசமான தோல்வியை சந்தித்து இருக்காது என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதே சமயம் லக்னோ அணி வீரர்கள் நேற்று ரன் எடுக்க ஓடியதை கண்டு, ஸ்கூல் பிள்ளைகளே ஒழுங்காக ஓடி ரன் எடுப்பார்கள். இவர்கள் என்ன இப்படி ஓடுகிறார்கள் என்று ட்ரோல் செய்யவும் துவங்கியுள்ளார்.
அதே வேலையில் ஆட்டத்தின் ஆரம்பத்திலேயே ஸ்டாய்னிஸ் ஒரு பந்தை தூக்கி அடிக்க அதை மும்பை பீல்டர்கள் கேட்ச் பிடிக்க தவறிவிட்டனர். இதானால் ரோகித் கொஞ்சம் கடுப்பாகத்தான் இருந்தார். ஆனால் ஸ்டாய்னிசின் சொந்த அணி வீரர் மூலமாகவே அவர் வெளியேற வேண்டிய சூழல் உருவானது அவருக்கு நிச்சயம் வருத்தத்தை அளித்திருக்கும்.