Homeகிரிக்கெட்ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு ஐசிசி வைத்த புதிய செக். இனி இந்த வீரர்களுக்கான அனுமதியில்...

ஐபிஎல் போன்ற டி20 தொடர்களுக்கு ஐசிசி வைத்த புதிய செக். இனி இந்த வீரர்களுக்கான அனுமதியில் கட்டுப்பாடு.. நடக்கப்போகும் மாற்றங்கள் என்ன?

-Advertisement-

ஐசிசி வருமானத்தில் அதிகளவு வருமானத்தை ஈட்டி கொடுப்பது பிசிசிஐ தான். இருப்பினும் வருமான பங்கீட்டில் பிசிசிஐ-க்கு குறைந்த அளவு வருமானத்தையே ஐசிசி வழங்கி வருகிறது. இதனால் பிசிசிஐ தரப்பில் 38.4% வருமான பங்கீடு மாடலுக்கு கோரிக்கை ஐசிசியிடம் வைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஐசிசியின் வருடாந்திர கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் டி20 லீக் தொடர்களில் வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்பது, வருமான பங்கீடு, பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சி, டெஸ்ட் கிரிக்கெட் அபராதம் உள்ளிட்டவை குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் முடிவில் பிசிசிஐ முன்வைத்த 38.4% வருமான பங்கீடு மாடலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐசிசியின் கிடைக்கும் ரூ.4,900 கோடி வருமானத்தில் ரூ.1,890 கோடி வருமானம் பிசிசிஐக்கு கிடைக்கவுள்ளது.

-Advertisement-

பிசிசிஐ-க்கு பின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சங்கத்திற்கு 6.89% வருமானமும், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு 6.25% வருமானமும் அளிக்கப்படவுள்ளது. அதுமட்டுமல்லாமல் இனி ஐசிசி சார்பாக நடத்தப்படும் அனைத்து தொடர்களுக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சமமான பரிசுத்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வளர்ந்து வரும் டி20 கிரிக்கெட் லீக் போட்டிகள் சர்வதேச கிரிக்கெட்டையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் 2027ஆம் ஆண்டுக்கு பின் இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்களை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் டி20 லீக் போட்டிகளில் ஒரு அணியில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு மேல் அனுமதிக்க கூடாது என்று விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

-Advertisement-

ஏற்கனவே நடைபெற்று வரும் டி20 லீக் போட்டிகளுக்கு இந்த விதிமுறைகள் பொருந்தாது என்றும், புதிய டி20 லீக் போட்டிகளில் கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் 4 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே பங்கேற்று வந்தாலும், மகளிர் ஐபிஎல் தொடரில் கூடுதலாக வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்று வருகிறார்கள்.

அதேபோல் ஐசிசியில் உறுப்பினராக உள்ள அனைத்து நாடுகளுக்கும் அடிப்படை வருமானம் பங்கீடாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுகள் அனைத்தும் அடுத்த 4 ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும். இதன் மூலம் இந்திய கிரிக்கெட் வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்படும் என்பதோடு, உள்ளூர் கிரிக்கெட் மற்றும் அடிப்படை வசதிகளிலும் வளர்ச்சி அதிகரிக்கும் என்று பிசிசிஐ அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.

-Advertisement-

சற்று முன்