- Advertisement 3-
Homeவிளையாட்டுசூப்பர் கிங்ஸ் அணியில் அம்பாதி ராயுடுவிற்கு மாற்று இவர் தான். வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூப்பர் கிங்ஸ் அணியில் அம்பாதி ராயுடுவிற்கு மாற்று இவர் தான். வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு

- Advertisement-

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தப் போட்டியுடன் சென்னை அணியின் அதிரடி வீரர் அம்பாதி ராயுடு அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் பிரியா விடை கொடுக்க, களத்தில் இருந்து கண்ணீருடன் வெளியேறினார் அம்பாதி ராயுடு.

இதன்பின் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்த அம்பாதி ராயுடு, விரைவில் அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். இதனிடையே அமெரிக்காவில் தொடங்க உள்ள மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் டெக்ஸாஸ் அணியை சிஎஸ்கே நிர்வாகம் வாங்கியது. இதற்கு டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் என்று பெயர் வைத்த நிலையில், வீரர்கள் ஒப்பந்தத்தை டிஎஸ்கே நிர்வாகம் தொடங்கியது.

- Advertisements -

இதில் அனைவருக்கும் ஆச்சரியமளிக்கும் வகையில் அம்பாதி ராயுடு களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். ஆனால் பிசிசிஐ ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட புதிய முடிவு காரணமாக அம்பாதி ராயுடுவுக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இருந்து சொந்த காரணங்களுக்காக விலகுவதாக அம்பாதி ராயுடு அறிவித்தார்.

இதனால் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் எந்த வீரரை திடீரென ஒப்பந்தம் செய்வதென தெரியாமல் திணறியது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 ஆண்டுகள் சிறந்த பங்களிப்பை அளித்த இம்ரான் தாஹிரை டிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக இம்ரான் தாஹிர் விளையாடுகையில், இவரது கொண்டாட்டத்திற்காகவே ரசிகர்கள் இவருக்கு ரசிகர்களாக மாறினார்கள்.

- Advertisement-

அதுமட்டுமல்லாமல் செல்லமாக பராசக்தி எக்ஸ்பிரஸ் என்று அழைத்து வந்தனர். 44 வயதாகும் இம்ரான் தாஹிர் பிஎஸ்எல், தி ஹண்ட்ரட், பிக் பேஷ் லீக், வங்கதேச பிரீமியர் லீக், கரீபியன் பிரீமியர் லீக் என்று எண்ணற்ற லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார். தற்போது டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டதன் மூலம், மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலும் களமிறங்க உள்ளார்.

இதுவரை உலகம் முழுவதும் 378 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள இம்ரான் தாஹிர், மொத்தமாக 469 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேபோல் 10 முறை 4 விக்கெட்டுகளையும், 3 முறை 5 விக்கெட்டுகளையும் இம்ரான் தாஹிர் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் இம்ரான் தாஹிர் ஆட்டத்திற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

சற்று முன்