ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ஆம் தேதி நடைபெற்ற போட்டியின் போது 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்த தொடரை அட்டகாசமாக துவங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.
அதனை தொடர்ந்து அக்டோபர் 11-ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 8 விக்கெட் வித்தியாசத்தில் அவர்களை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்து வெற்றி நடை போட்டு வருகிறது.
அதனை தொடர்ந்து இந்திய அணி தங்களது மூன்றாவது போட்டியில் அக்டோபர் 14-ஆம் தேதி நாளை அகமதாபாத் நாரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பலப்பரீட்சை நடத்த உள்ளது. இந்த தொடரில் அரையறுதிக்கு முன்னேறும் அணிகளாக பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த போட்டியில் வெற்றி பெறப்போகும் அணி எது என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் உச்சத்தை தொட்டுள்ளது.
இவ்வேளையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. ஏனெனில் முதல் இரண்டு போட்டிகளிலும் விளையாடாத சுப்மன் கில் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? மாட்டாரா? கழட்டிவிடப்பட்ட அஸ்வின் மீண்டும் அணிக்குள் வருவாரா? வரமாட்டாரா? என்ற பல கேள்விகள் நம் முன் உள்ளன.
இந்நிலையில் நாளைய பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கி உள்ளோம். அதன்படி முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்றுள்ளதால் பெரிய அளவில் இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றும் ஆனாலும் ஒரே ஒரு மாற்றமாக ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக முகமது ஷமி சேர்க்கப்படலாம் என்று தெரிகிறது. அதை தவிர்த்து பெரிய அளவில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
1) ரோஹித் சர்மா, 2) இஷான் கிஷன், 3) விராட் கோலி, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) ஹார்டிக் பாண்டியா, 7) ரவீந்திர ஜடேஜா, 8) முகமது ஷமி, 9) குல்தீப் யாதவ், 10) ஜஸ்ப்ரீத் பும்ரா, 11) முகமது சிராஜ்.