உலககோப்பைல பாருங்க, நாங்க எதிரணிக்கு டேஞ்சரா இருப்போம்.. இந்த மாதிரி பன்றது அவ்ளோ ஈசி இல்லை – வெற்றிக்கு பிறகு ஷகிப் அல் ஹசன் பேச்சு

- Advertisement -

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்ற போட்டியில் வெற்றி தோல்வி என எது வந்தாலும் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்ற நிலையில் இந்திய அணியில் பல மாற்றங்கள் ஏற்பட்டது.

உலகக் கோப்பை அணிக்காக அறிவிக்கப்பட்ட வீரர்களில் திலக் வர்மா பிரசித்தி கிருஷ்ணா போன்றோர் இந்த அணியில் இடம் பெற்று இருந்தனர். அதேபோல் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, பும்ரா, குல்தீப், சிராஜ் போன்றோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன் காரணமாக முதலில் பேட்டிங் செய்த பங்களாதேஷ் அணி 8 எடுத்து விக்கெட் இழப்பிற்கு 265 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டனான சகிப் அல் ஹசன் அதிகபட்சமாக அந்த அணிக்காக 80 ரன்கள் சேர்த்தார். அந்த அணியில் இறுதி வரிசையில் வந்த வீரர்களை இந்திய பவுலர்கள் கட்டுப்படுத்த முடியாமல் போனதன் விளைவாக அந்த அணி இவ்வளவு ரன்களை குவித்தது.

அடுத்ததாக பேட்டிங் ஆட களமிறங்கிய இந்தியா அணி பெருமளவில் பேட்டிங்கில் சொதப்பியது. சும்மன் கில் மற்றும் அக்சர் பட்டேலை தவிர மற்ற யாரும் பெரிய அளவில் ரன்களை சேர்க்கவில்லை. அதன் காரணமாக இந்த போட்டியானது இறுதி ஓவர் வரை சென்றது. கடைசியாக 10 விக்கட்டுகளையும் இழந்து இந்தியா அணி 49.5 ஓவரில் 259 ரகளை மட்டுமே அடித்தது.

- Advertisement -

இந்த போட்டி முடிந்த பிறகு பேசிய பங்களாதேஷ் அணியின் கேப்டன் சகிப் அல் அசன் கூறியதாவது, அதிகம் விளையாடாத வீரர்களுக்கு இந்த போட்டியில் நாங்கள் வாய்ப்புகளை வழங்கினோம். இந்தக் களத்தில் ஸ்பின்னர்கள் நிச்சயம் விக்கெட்டுகளை வீழ்த்துவார்கள் என்பதை நாங்கள் கணித்தோம். நிச்சயம் இது சவால் நிறைந்த விக்கட்டாக இருந்தது. ஆனால் பந்து பழையதானதும் பந்துவீச்சு எளிதானது.

மகேதி ஹசன் அருமையாக பௌலிங் செய்து எங்கள் அணிக்கு திருப்புமுனையை கொடுத்தார். அதே சமயம் ஆட்டத்தின் இறுதி கட்டத்திலும் அவர் ஐந்து ஓவர்களை வீசினார். ஒரு ஸ்பின்னர் இதுபோன்று பந்து வீசுவது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. அதே போல் தன்சிமும் சிறப்பாக பவுலிங் செய்து ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுத்தார்.

எங்களுக்கு சிறப்பான ஒரு அணி அமைந்தது. சில வீரர்கள் காயம் காரணமாக வெளியேறி உள்ளதால் புதிய வீரர்கள் உள்ளே வந்துள்ளார்கள். உலகக் கோப்பை பொறுத்தவரை நாங்கள் நிச்சயம் மற்ற அணிகளுக்கு டேஞ்சராக இருப்போம் என்று சகிப் அல் அசன் கூறியுள்ளார்.

- Advertisement -

சற்று முன்