இந்த வருட ஆசிரிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்ற நிலையில் ஏற்கனவே மகளிர் அணி இறுதிப் போட்டியில் வென்று தங்கத்தை தன் வசமாகியது.
ஆடவர் பிரிவைப் பொறுத்தவரை, இந்தியா பாகிஸ்தான் பங்களாதேஷ் இலங்கை ஆகிய நான்கு நாடுகளும் காலிறுதி சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றது. இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் நேபால் அணிகளுக்கு இடையே ஆன போட்டி துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி துவக்கு வீரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் களம் இறங்கினர். ஒரு பக்கம் ஜெய்ஸ்வால் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருக்கையில் ருதுராஜ் மறுமுனையில் பொறுமையாக விளையாடிக் கொண்டிருந்தார்.
ஒரு கட்டத்தில் ருதுராஜ் 23 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து வெளியேற, அடுத்து வந்த திலக் வருமா வெறும் இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியில் விக்கெட் கீப்பராக விளையாடும் ஜிதேஷ் சர்மாவும் 5 ரன்களில் ஆட்டம் இழக்,க அதிரடி ஆட்டக்காரரானசிவம் துபே அடுத்து களமிறங்கி 19 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
அதே போல் ஐபிஎல்-லில் தனது அதிரடியை காட்டி அனைவரது மனதையும் வென்ற ரிங்கு சிங் 15 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். இதில் சிவம் தூபே மற்றும் ரிங்கு சிங் ஆகியோர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இந்த நிலையில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 49 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் டி20 போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் சுப்மன் கில் தான் அந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தார். தற்போது ஜெய்ஷ்வால் தனது 21 வயது 279 நாட்களில் இந்த சாதனையை படைத்துள்ளார்.
இதற்கு முன் சுப்மன் கில் 23 வயது 146 நாட்களில் இந்த சாதனையை புடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல டி20 போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலிலும் இணைந்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால். இந்தப் பட்டியலில் சூரியகுமார் யாதவ் 48 பந்துகளில் சதம் அடித்து நான்காவது இடத்தை பிடித்திருந்தார். தற்போது அந்த சாதனையை சமன் செய்துள்ளார் யஷஸ்வி ஜெய்ஸ்வால்.