- Advertisement -
Homeவிளையாட்டுமழையால் பாக்கிஸ்தான் அணிக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய அணிக்கு பெரும் சிக்கல்.. இனி கொஞ்சம் பிசிறு...

மழையால் பாக்கிஸ்தான் அணிக்கு அடித்த ஜாக்பாட்.. இந்திய அணிக்கு பெரும் சிக்கல்.. இனி கொஞ்சம் பிசிறு தட்டினாலும் அவ்வளவு தான்.

- Advertisement-

இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 48.5 ஓவர்களில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 266 ரன்கள் குறித்தது. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் தடுமாறினார்கள் என்றே கூற வேண்டும்.

மிகவும் மோசமான நிலையில் இருந்த இந்திய அணியை இஷான் கிஷன் மற்றும் ஹர்திக்பாண்டியா என இருவரும் தான் காப்பாற்றினார்கள். இஷான் கிஷன் சிறப்பாக விளையாடி 81 பந்துகளில் 82 ரன்களை குவித்திருந்தார். அதில் ஆறு பவுண்டர்களும் இரண்டு சிக்ஸர்களும் அடக்கம். அதேபோல் ஹர்திக் பாண்டியா 90 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார்.

இவர்களுக்கு முன்பாக களம் இறங்கிய ரோகித் 22 பந்துகளில் 11 ரன்களும் சுப்மங்கில் 32 பந்துகளில் 10 ரன்களும், விராட் கோலி 7 பந்துகளில் நான்கு ரன்களும் மட்டுமே எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்திய அணியில் நான்காவது இடத்தில் இறங்கக்கூடிய வீரர் யார் என்ற கேள்வி தற்போது வரை இருந்து வரும் நிலையில், நேற்றைய போட்டியில் அந்த இடத்தில் இறங்கிய ஷ்ரேயஸ் ஐயர் ஒன்பது பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

அவர் ஆரம்பத்தில் அதிரடியாக ஆட தொடங்கினாலும் மிகவும் சுலபமான ஒரு கேட்சை 10 பகர் சமானிடம் கொடுத்து வெளியேறினார். அதேபோல் பௌலராகவும் பேட்டராகவும் செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷர்துல் தாக்கூர் மூன்று பந்துகளில் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். ஆனால் வேகப்பந்து பேச்சாளரான பும்ரா கடைசி நேரத்தில் 14 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு கை கொடுத்தார்.

- Advertisement-

பாகிஸ்தான் அணியின் சார்பில் ஷஹீம் அப்ரிடி நான்கு விக்கெட்டுகளும், நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரௌஃப் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளும் விழித்தனர். இந்திய அணி பேட்டிங் செய்யும்போது அவ்வப்போது மழை வந்ததால் ஆட்டம் அவ்வப்போது தடைபட்டு மீண்டும் தொடங்கியது. ஆனால் இந்திய அணியின் பேட்டிங் முடிந்த பிறகு மழை விடாது பெய்ததால் போட்டியை நடத்த முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு போட்டி ரத்தானது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளுக்கும் தல ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி சூப்பர் ஃபோர் ஸ்டேஜுக்கு முன்னேறி உள்ளது. இந்த ஆசிய கோப்பையில் சூப்பர் போர் ஸ்டேஜுக்கு முன்னேறிய முதல் அணியாக பாகிஸ்தான் அணி உள்ளது. அதேபோல் அடுத்ததாக இந்திய அணி நேபால் அணியோடு மோத உள்ளது. அந்த போட்டியில் இந்திய அணி வென்றே ஆக வேண்டும் இல்லையெனில் வெளியேற வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் நேற்றைய போட்டியின் முடிவு பாக்கிஸ்தான் அணிக்கு சாதகமாகவே இருந்துள்ளது.

சற்று முன்