இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான போட்டியான நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியானது கொழும்பு மைதானத்தில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி துவங்கிய ரிசர்வ் டேவான செப்டம்பர் 11-ஆம் தேதி முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது.
அதன்படி முதலில் இந்திய அணியனது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 356 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 122 ரன்களையும், கே.எல் ராகுல் 111 ரன்கள் குவித்தனர்.
பின்னர் 357 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பாகிஸ்தான் அணியானது 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 8 ஓவர்கள் வீசி 25 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் இந்த போட்டியின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியின் முன்னணி வீரரான விராட் கோலி 94 பந்துகளை சந்தித்து 9 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 122 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன் காரணமாக அவருக்கு போட்டியின் ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி தான் சந்தித்த 83-வது பந்தில் சதம் அடித்து அசத்தியிருந்தார். அதோடு அவரின் இந்த சதமானது ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் அடிக்கும் 47-ஆவது சதமாகவும் ரெக்கார்ட் புக்கில் இடம் பெற்றது. அதோடு இந்த சதத்தின் மூலம் ஏகப்பட்ட சாதனைகளுக்கும் அவர் சொந்தக்காரராக மாறியுள்ளார். விராட் கோலி சதம் அடித்ததும் எதிர்ப்புறம் ஓடி வந்து அந்த சதத்தை கொண்டாடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
💯 NUMBER 4️⃣7️⃣
King @imVkohli, take a bow! 🙌😍
Legendary knock by the modern day great. #Pakistan truly gets the best out of the King!Tune-in to #AsiaCupOnStar, LIVE NOW on Star Sports Network#INDvPAK #Cricket pic.twitter.com/7BfKckU1AO
— Star Sports (@StarSportsIndia) September 11, 2023
எதிர்வரும் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் மிக முக்கிய வீரராக பார்க்கப்படும் விராட் கோலி தற்போது உலகக்கோப்பை தொடர் துவங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் மீண்டும் தனது அசத்தலான பார்மை வெளிப்படுத்தி உள்ளது உலகக் கோப்பை தொடரிலும் அவர் எவ்வாறு விளையாடப் போகிறார் என்பதை உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரசிகர்கள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.