- Advertisement 3-
Homeவிளையாட்டுIND vs WI: நோ ருதுராஜ், நோ ரிங்கு சிங். அறிவிக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான...

IND vs WI: நோ ருதுராஜ், நோ ரிங்கு சிங். அறிவிக்கப்பட்டது வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணி. சீனியர் வீரர்களுக்கும் வாய்ப்பு இல்லை. பல இளம் வீரர்களுக்கு இடம்.

- Advertisement 1-

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்வியால் இந்திய அணி மீது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. அதனைத் தொடர்ந்து ஒரு மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் இந்திய அணி களத்தில் இறங்க உள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக மூன்று வடிவங்கள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட உள்ளது.

இந்த தொடரானது ஜூலை 12ஆம் தேதி துவங்க உள்ளது. ஏற்கனவே இந்த தொடருக்கான ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்டது. ஆனால் டி20 தொடருக்கான இந்திய அணி மட்டும் அறிவிக்கப்படாமல் அப்படியே நிலுவையில் இருந்தது. இந்த நிலையில் நேற்று டி20 தொடருக்கான அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியை பொறுத்தவரை மூத்த வீரர்களுக்கு இடம் கொடுக்கப்படவில்லை. அதே சமயம் இளம் வீரர்கள் பலர் இதில் இடம் பெற்றுள்ளனர். அஜித் அகார்கர் இந்திய அணியின் தலைமை தேர்வாளராக அறிவிக்கப்பட்ட அடுத்த நாளே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அணியை பொறுத்தவரை சில முக்கிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போனது சற்று வருத்தம் அளிக்கக் கூடிய விடயம் என்றே கூறலாம்.

குறிப்பாக ஐபிஎல்லில் சிறப்பாக செயல்பட்ட ருதுராஜ், ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இந்த டி20 அணியில் இடம் பெறவில்லை. அதே சமயம் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடருக்கான அணியில் இடம் பெற்றிருந்த ஜெய்ஸ்வால் இந்த அணியில் தொடர்கிறார். அதேபோல் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்ட திலக் வர்மா இந்த அணியில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement 2-

மூத்த வீரர்களான கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அதோடு பல காலமாக வாய்ப்பு மறுக்கப்பட்ட விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ஆன சஞ்சு சாம்சனுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் முகேஷ் குமாரும் இந்த இளம் அணியில் இடம்பெற்றுள்ளார். ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்த அணி விளையாட உள்ளது.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 13 தேதி வரை 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த அணியின் விவரங்கள். இஷான் கிஷன் (கீப்பர்), சுப்மன் கில், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், ஹார்டிக் பாண்டியா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், ஆவேச கான், முகேஷ் குமார்.

சற்று முன்