- Advertisement 3-
Homeவிளையாட்டுபயமுறுத்திய அயர்லாந்து, பாய்ந்து அடித்து தொடரை வென்ற இந்திய அணி... ரிங்கு இல்லாட்டி சங்கு தான்.....

பயமுறுத்திய அயர்லாந்து, பாய்ந்து அடித்து தொடரை வென்ற இந்திய அணி… ரிங்கு இல்லாட்டி சங்கு தான்.. கடைசி நிமிடத்தில் கை கொடுத்த ரன்கள்..

- Advertisement-

இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டி20 போட்டியானது டப்ளின் நகரில் இன்று நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணியின் கேப்டன் பால் ஸ்டெர்லிங் முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

அதன்படி முதலில் விளையாடிய இந்தியா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 40 ரன்களையும், ரிங்கு சிங் 38 ரன்களையும், ஷிவம் துபே 22 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisements -

பின்னர் 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய அயர்லாந்து அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் அயர்லாந்து அணி சார்பாக அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர் பால்பர்னி மட்டும் 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்து அதிரடி காட்டினாலும் அவருடன் கைகோர்க்க சரியான பார்ட்னர் இல்லாததால் இந்த போட்டியில் அவர்கள் தோல்வியை சந்திக்க நேர்ந்தது.

- Advertisement-

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்களையும், சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னாய் இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்திய இந்த போட்டியில் சவாலான இலக்கினை அயர்லாந்து அணிக்கெதிராக நிர்ணயித்திருந்தும் கத்துக்குட்டியான அயர்லாந்து அணியின் போராட்டம் அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 3-ஆவது மற்றும் கடைசி டி20 போட்டியானது ஆகஸ்ட் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்