உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் போட்டி எந்த மைதானத்தில்?… பிசிசிஐ எடுக்கவுள்ள முடிவு!

- Advertisement -

50 ஓவர் கிரிக்கெட் உலகக்கோப்பை இந்த ஆண்டு இறுதியில் இந்தியாவில் நடக்க உள்ளது. முதல் முதலாக அனைத்துப் போட்டிகளும் இந்தியாவில் மட்டுமே நடக்க உள்ளன. நாக்பூர், பெங்களூரு, திருவனந்தபுரம், மும்பை, டெல்லி, லக்னோ, கவுகாத்தி, ஹைதராபாத், கொல்கத்தா, ராஜ்கோட், இந்தூர், பெங்களூரு மற்றும் தர்மஷாலா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடக்கும் என தெரிகிறது.  50 ஓவர் உலகக் கோப்பை அக்டோபர் 5 முதல் தொடங்கும் என தெரிகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் தனது பெரும்பாலான போட்டிகளை சென்னை மற்றும் பெங்களூருவில் விளையாட வைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானமும் பாகிஸ்தான் போட்டிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரிகிறது. இதேபோல், பங்களாதேஷ் தனது பெரும்பாலான போட்டிகளை கொல்கத்தா மற்றும் கவுகாத்தியில் விளையாடலாம், ஏனெனில் இது அண்டை நாட்டிலிருந்து வரும் ரசிகர்களின் பயண தூரத்தை குறைக்கும்.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இந்த தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டியாக இருக்கும். அந்த போட்டியை சுமார் ஒரு லட்சம் பேர் பார்க்கக்கூடிய வசதியுள்ள, இந்தியாவின் மிகப்பெரிய மைதானதமான அகமதாபாத் மைதானத்தில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இரு நாட்டு தொடர்களில் அரசியல் காரணங்களுக்காக விளையாடுவதில்லை. ஐசிசி நடத்தும் தொடர்களில் மட்டுமே கலந்துகொண்டு எதிர்த்து விளையாடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பாகிஸ்தானில் நடக்கும் ஆசியக் கோப்பை தொடருக்கு பாதுகாப்பு காரணங்களால் இந்திய அணியை அனுப்புவதற்கு பிசிசிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அப்படி இந்திய அணி, பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், தங்கள் அணியும் 50 ஓவர் கிரிக்கெட் போட்டிக்காக இந்தியா வராது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் கோபமாக பேசி இருந்தது. இதுவரை ஆசியக் கோப்பை தொடர் பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இந்த ஐபிஎல் முடிவடைந்தவுடன் உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்