- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்ரிக்கா.. 4 அணிகளுக்குமே உள்ள ஒற்றுமை.. சூப்பர் 8ல்...

இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், சவுத் ஆப்ரிக்கா.. 4 அணிகளுக்குமே உள்ள ஒற்றுமை.. சூப்பர் 8ல் காத்திருக்கும் செம ட்விஸ்ட்..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகள் அனைத்தும் தற்போது முடிவுக்கு வந்துள்ள நிலையில், அடுத்ததாக சூப்பர் 8 சுற்றிற்கு அனைத்து அணிகளும் தயாராகிவிட்டனர். குரூப் 1 இல் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும், குரூப் 2 வில் அமெரிக்கா, சவுத் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.

இதில் முதலாவதாக குரூப் 2 வின் சூப்பர் 8 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் அமெரிக்கா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் மோத உள்ளது.

குரூப் ஒன்றை பொறுத்தவரையில் 20 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியாவும் அடுத்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளும் மோதுகின்றது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடம்பிடித்துள்ள பிரிவில் சவால் குறைவாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளை எளிதாக எடுத்து விட முடியாது.

எந்த நேரத்தில் எப்படிப்பட்ட பெரிய அணிகளுக்கு எதிராக தங்களின் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்பதே கணிக்க முடியாமல் இருக்கும் நிலையில் நிச்சயம் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மிக கவனமாக அவர்களை எதிர்கொண்டு ஆட வேண்டும். ஆனால் இன்னொரு பக்கம் தென்னாபிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அனைத்துமே பெரிய அணிகளாக இருப்பதால் நிச்சயம் ஒவ்வொரு போட்டியிலும் அனல் பறக்கும் என்றே தெரிகிறது.

- Advertisement 2-

இதற்கிடையே சூப்பர் 8 சுற்றில் இருந்து அரை இறுதிக்கு எந்தெந்த அணிகள் முன்னேறும் என்பது பற்றியும், இறுதி போட்டிக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ள இரண்டு அணிகள் எவை என்பது பற்றியும் தங்கள் கருத்துக்களையும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அப்படி ஒரு சூழலில் லீக் சுற்றில் நான்கு பிரிவிலும் இடம்பெற்றிருந்த ஒவ்வொரு அணிகள் இந்த முறை செய்த ஒரு முக்கியமான சம்பவத்தை பற்றி தற்போது பார்க்கலாம்.

குரூப் ஏவில் இடம் பிடித்திருந்த இந்திய அணி 4 போட்டிகளில் மூன்றில் ஆடி வெற்றி பெற்றிருந்த நிலையில் ஒரே ஒரு போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. ஆனால் அதே வேளையில் குரூப் பி-ல் முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா, குரூப் சி யில் முதலிடம் பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி, குரூப் டி-ல் இடம் பிடித்த சவுத் ஆப்பிரிக்கா என மூன்று அணிகளும் தாங்கள் ஆடிய நான்கு போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தையும் தங்கள் பிரிவில் பிடித்திருந்தனர்.

இதனால் இந்தியா, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் சவுத் ஆப்பிரிக்கா என நான்கு அணிகள் நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஒரு தோல்வி கூட சந்திக்காமல் இருந்து வருகின்றனர். ஆனால் சூப்பர் 8 சுற்றில் இவர்கள் மாறி மாறி மோதிக் கொள்வார்கள் என்பதால் இதில் ஏதாவது ஒன்றிரண்டு அணிகளுக்கோ அள்ளாது அனைத்து அணிகளுக்கோ தோல்வியை சந்திக்க முடியும் என்ற சூழல் உள்ளது.

அதே வேளையில், சூப்பர் 8 மற்றும் அரையிறுதி சுற்றிலும் ஏதேனும் அணி தோல்வி அடையாமல் வெற்றியை தொடர்வார்களா என்பதும் மிகப்பெரிய ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி உள்ளது.

சற்று முன்