- Advertisement -
Homeவிளையாட்டுஇவ்வளவு டம்மியாடா நீங்க.. ஜடேஜா சுழலில் தவிடுபொடியான தென்னாப்பிரிக்கா.. இந்திய அணி சாதனை வெற்றி

இவ்வளவு டம்மியாடா நீங்க.. ஜடேஜா சுழலில் தவிடுபொடியான தென்னாப்பிரிக்கா.. இந்திய அணி சாதனை வெற்றி

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்த்து தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா – சுப்மன் கில் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. இதன்பின் ரோகித் சர்மா 40 ரன்களும், சுப்மன் கில் 23 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து வந்த விராட் கோலி – ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இந்திய அணியை மீட்டது. சிறப்பாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் 77 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 101 ரன்களும் எடுத்தனர். இறுதியாக 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 326 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி முதல் 10 ஓவர்களில் 91 ரன்கள் சேர்த்த நிலையில், அதன்பின் ஆடுகளத்தின் மாற்றாம் இந்திய அணியின் ரன் ரேட் குறைந்தது. இருப்பினும் ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி மீண்டது. இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி 327 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கியது.

தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா – டி காக் இருவரும் தொடக்கம் கொடுத்தனர். இதில் 4 சதங்களை விளாசிய டி காக் வெறும் 5 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் போல்டாகி ஆட்டமிழக்க, தொடர்ந்து கேப்டன் பவுமா 11 ரன்களில் ஜடேஜா பந்தில் போல்டாக, தொடர்ந்து முகமது ஷமி தனது வேலையை காட்டிவிட்டார். மார்க்ரம் மற்றும் வான் டர் டஸன் இருவரையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தி அசத்தினார்.

- Advertisement-

இதுமட்டுமல்லாமல் மீண்டும் ஜடேஜாவின் பந்தில் கிளாஸன் 1 ரன்னிலும், டேவிட் மில்லர் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 59 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் ஜடேஜாவின் சுழலை எதிர்கொள்ள முடியாமல் தவிடுபொடியானது.

மகாராஜ் 7 ரன்களிலும், ரபாடா 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, மார்கோ யான்சன் 14 ரன்களிலும், இங்கிடி டக் அவுட்டிலும் குல்தீப் யாதவ் வீழ்த்தினார். இதனால் தென்னாப்பிரிக்கா 27.1 ஓவர்களில் 83 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் மற்றும் முகமது ஷமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூலம் இந்திய அணி 243 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.

சற்று முன்