- Advertisement -
Homeவிளையாட்டுஇலங்கையை சுருட்டிய இந்திய அணி.. நேரடியாக பைனலிற்க்கு செல்கிறதா?.. பாயிண்ட்ஸ் டேபிள் சொல்வது என்ன?

இலங்கையை சுருட்டிய இந்திய அணி.. நேரடியாக பைனலிற்க்கு செல்கிறதா?.. பாயிண்ட்ஸ் டேபிள் சொல்வது என்ன?

- Advertisement-

ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இலங்கை – இந்தியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்தது. சுப்மன் கில் 19 ரன்களிலும், விராட் கோலி 3 ரன்களிலும், ரோகித் சர்மா 53 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் வந்த வீரர்களில் கேஎல் ராகுல் 36 ரன்களும், அக்சர் படேல் கடைசி நேரத்தில் 26 ரன்களும் சேர்த்தனர்.

இதனால் இந்திய அணி 49.1 ஓவர்களில் 213 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இலங்கை அணி தரப்பில் 20 வயதேயான இளம் வீரர் வெல்லாலகே 5 விக்கெட்டுகளையும், அசலங்கா 4 விக்கெட்டுகளையும், தீக்சனா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். அதேபோல் இந்திய அணி முதல்முறையாக 10 விக்கெட்டுகளையும் ஸ்பின்னர்களிடம் இழந்து சோகமான சாதனையை படைத்தது.

இதன்பின்னர் இலங்கை அணியின் நிஷாங்கா – கருணரத்னே கூட்டணி களமிறங்கியது. இதில் பும்ரா வீசிய 3வது ஓவரில் நிஷாங்கா 6 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து களமிறங்கிய மெண்டிஸ் அதிரடியாக சில பவுண்டரிகளை விளாசினார். இவருக்கு சிறப்பாக ஸ்லோயர் பந்தை வீசி பும்ரா வீழ்த்த, மெண்டிஸ் 15 ரன்களில் வெளியேறினார். பின்னர் சிராஜ் தன் பங்கிற்கு கருணரத்னேவை 2 ரன்களில் விக்கெட்டை வீழ்த்தினார்.

தொடர்ந்து வந்த சமரவிக்ரமா 17 ரன்களிலும், ஆல்ரவுண்டர் அசலங்காவும் 22 ரன்களிலும் குல்தீப் யாதவ் சுழலில் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த இலங்கை ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரமான கேப்டன் டசுன் ஷனகா 9 ரன்களில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement-

பின்னர் பவுலிங்கில் அசத்திய வெல்லாலகே – தனஞ்செயலா சில்வாவுடன் இணைந்தார். இந்த கூட்டணி இந்திய பவுலர்களுக்கு சவால் அளித்தது. குறிப்பாக வெல்லாலகேவின் ஆட்டம் ரசிகர்களிடையே பிரமிப்பை ஏற்படுத்தியது. இந்த கூட்டணி இணைந்து 63 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய தனஞ்செயலா சில்வா 41 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

தொடர்ந்து வந்த தீக்சனா 2 ரன்களிலும், ரஜிதா 1 ரன்னிலும், பதிரானா டக் அவுட்டிலும் வெளியேறினர். இதன் மூலம் இலங்கை அணி 41.3 ஓவர்களுக்கு 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அசத்தியது. அதேபோல் ஆசியக் கோப்பை இறுதிச்சுற்றுக்கும் இந்தியா தகுதிபெற்றது. கடைசி வரை ஆடிய வெல்லாலகே 42 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 4 புள்ளிகளோடு புள்ளிபட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

சற்று முன்