- Advertisement 3-
Homeவிளையாட்டுசோலி முடிஞ்சு.. 10 வருஷம் கழிச்சு நடந்த மேஜிக்.. ரோஹித் தலைமையில் பழிக்கு பழி வாங்கிய...

சோலி முடிஞ்சு.. 10 வருஷம் கழிச்சு நடந்த மேஜிக்.. ரோஹித் தலைமையில் பழிக்கு பழி வாங்கிய இந்தியா..

- Advertisement 1-

இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் மோதி இருந்த அரையிறுதி போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே மழை பற்றிய எச்சரிக்கை அதிகமாக தான் இருந்தது. ஆனால் போட்டி நடைபெற இருந்த தினத்தில் பெரிய அளவில் மழைக்கான அறிகுறி எதுவும் இல்லாமல் இருந்து வந்த சூழலில் தான் டாஸ் போடும் நேரத்துக்கு முன்பாக திடீரென மழை பெய்ய ஆரம்பித்து இருந்தது.

இதனால் போட்டியும் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமாக ஆரம்பித்த நிலையில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்திருந்தது. ரோஹித் முதலில் பேட்டிங் செய்ய தான் விரும்புவதாக குறிப்பிட்டு இருந்த நிலையில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது.

இதுவரை டி20 உலக கோப்பை தொடரில் அனைத்து அரையிறுதி போட்டிகளிலும் அரைச்சதம் அடித்துள்ளார் கோலி. இதனால் ஃபார்மில் இல்லாத அவர் இங்கிலாந்துக்கு எதிராக கம்பேக் கொடுத்து அசத்துவார் என எதிர்பார்த்தால் மீண்டும் ஒருமுறை ஒன்பது ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டாகி ஏமாற்றம் அளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த்தும் நான்கு ரன்களில் வெளியேற இந்திய அணிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சிகள் காத்திருந்தது.

ஆனாலும் இந்திய ரசிகர்கள் துவண்டு போகக் கூடாது என உறுதியாக இருந்த ரோஹித் ஷர்மா, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவருடன் இணைந்து சூர்யகுமார் யாதவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி 8 ஓவர்களில் 65 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி பின்னரும் 1 மணி நேரம் தடைபட, தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் ரோஹித் ஷர்மா 57 ரன்களிலும், சூர்யகுமார் 47 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

- Advertisement 2-

அடுத்து வந்த வீரர்களில் ஹர்திக் பாண்டியா மட்டும் 13 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து அவுட்டாக, ஷிவம் துபே கோல்டன் டக்காகினார். 190 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 171 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. மழை பெய்தது ஒரு பக்கம் இருக்க, இந்த மைதானத்தில் 170 ரன்களுக்கு மேல் யாரும் சேசிங் செய்ததில்லை என்ற நம்பிக்கை இந்திய ரசிகர்களுக்கு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கிய இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக இருந்தாலும் பட்லர் விக்கெட்டை அக்சர் படேல் தனது முதல் பந்திலேயே வீழ்த்த பெரிய திருப்புமுனையும் உருவாகி இருந்தது. அடுத்ததாக பில் சால்ட்டை பும்ராவும், பேர்ஸ்டோவை அக்சர் படேலும் அவுட் எடுக்க, ஆறு ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகள் இழப்புக்கு 39 ரன்களை சேர்த்திருந்தனர்.

இதன் பின்னர் அதிலிருந்து மீளவே முடியாமல் தவித்த இங்கிலாந்து அணி, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள திணறி விக்கெட்டுகளையும் இழந்தது. இறுதியில் 17வது ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்த அவர்கள், 103 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கும் முன்னேறி உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் 2022 ஆம் ஆண்டு அரையிறுதி தோல்விக்கும் இங்கிலாந்தை பழிவாங்கி உள்ளனர். மேலும் டி 20 உலக கோப்பையின் இறுதி போட்டியில் தென்னாப்பிரிக்க அணியையும் ஜுன் 29 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது ரோஹித் தலைமையிலான இந்திய அணி.

அதே போல, 10 ஆண்டுகளுக்கு பிறகு டி20 உலக கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ள இந்திய அணி, தொடர்ச்சியாக 3 ஐசிசி தொடரின் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

சற்று முன்