- Advertisement 3-
Homeவிளையாட்டுஷமியவே பெஞ்ச்ல உக்கார வச்சிருக்காங்க.. ரோகித், கோலி எல்லாம் தரமா இருக்காங்க.. பிளானிங் இல்லாட்டி வேலைக்கே...

ஷமியவே பெஞ்ச்ல உக்கார வச்சிருக்காங்க.. ரோகித், கோலி எல்லாம் தரமா இருக்காங்க.. பிளானிங் இல்லாட்டி வேலைக்கே ஆகாது – கடுமையாக எச்சரித்த கம்ரான் அக்மல்

- Advertisement-

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில வாரங்களில் தொடங்கவுள்ளது. இதற்காக மைதானங்களை தயார் செய்யும் பணிகளையும், ஆடுகளத்தை பராமரிக்கும் பணிகளிலும் பிசிசிஐ மற்றும் ஐசிசி இணைந்து பணியாற்றி வருகிறது. அதேபோல் உலகக்கோப்பை தொடரை வெல்ல அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

அக்.5 ஆம் தேதி முதல் நவ.19ஆம் தேதி வரை உலகக்கோப்பை கிரிக்கெட் நடக்கவுள்ளது. அதில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அக்.14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்று தீர்ந்த நிலையில், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisements -

இதனிடையே இந்திய அணியின் பலம் குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் எச்சரித்துள்ளார். ஏனென்றால் ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தான் அணி படுதோல்வியை சந்தித்தது. கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் அபாரமான ஃபார்மில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் கம்ரான் அக்மல் பேசும் போது, இந்திய அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி பெஞ்சில் அமர வைக்கப்பட்டுள்ளார். அவருக்கே இந்திய பிளேயிங் லெவனில் இடமில்லை. அந்த அளவிற்கு இந்திய அணியின் பவுலிங் படை சிறப்பாக உள்ளது. விராட் கோலி, ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் தரமான ஃபார்மில் இருக்கிறார்கள்.

- Advertisement-

என்னை பொறுத்தவரை அக்.14ஆம் தேதி நடக்கவுள்ள போட்டிக்கு பாகிஸ்தான் அணி சிறப்பாக திட்டமிட வேண்டும். இந்திய அணியை வீழ்த்த ஆசியக் கோப்பை மனநிலையில் சென்றால், வேலைக்கே ஆகாது. கடந்த 3 ஆண்டுகளை விடவும் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும். இல்லை என்றால் இந்திய அணி நிச்சயம் துவம்சம் செய்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டுமே மோசமாக உள்ளது. ஷாகின் அப்ரிடி மட்டுமே நம்பிக்கையுடன் இருக்கிறார். நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ராஃப் இருவரும் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்றே கூற வேண்டும்.

சற்று முன்