ஆசியக் கோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – இலங்கை அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டது. இதனால் திலர் வர்மா, ஷமி, சூர்யகுமார் யாதவ், ஷர்துல் தாக்கூர் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. முதலில் பேட்டிங் ஆடிய 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
ஆனால் ஷகிப் அல் ஹசன் – ஹிர்டாய் இருவரும் 101 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய ஷகிப் அல் ஹசன் 80 ரன்களும், ஹிர்டாய் 54 ரன்களும் சேர்த்தனர். கடைசி நேரத்தில் நஸும் 44 ரன்களும், மெஹதி ஹசன் 29 ரன்களும் சேர்க்க, அந்த அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்திய அணிக்கு 266 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதன் பின் களமிறங்கிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் வந்த திலக் வர்மா 5 ரன்களில் போல்டாகி ஆட்டமிழக்க, இந்தியா 17 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் வந்த ராகுல் 19 ரன்களிலும், இஷான் கிஷன் 5 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 26 ரன்களிலும், ஜடேஜா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் பொறுப்புடன் ஆடிய தொடக்க வீரர் சுப்மன் கில் 117 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அவரும் அக்சர் படேலும் இணைந்து இந்திய அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினர். ஆனால் சுப்மன் கில் 121 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பின் உச்சிக்கு சென்றது. ஆனால் அக்சர் படேல் அதிரடியாக ரன்கள் சேர்க்க தொடங்கினார்.
ஆனால் முஷ்டாஃபிகுர் ரஹ்மான் வீசிய 48வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் 11 ரன்களிலும், அக்சர் படேல் 42 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து வங்கதேசம் அணி டெஸ்ட் போட்டியை போல் ஃபீல்டிங்கை செட் செய்தது. இதனால் கடைசி ஓவரில் இந்திய அணி 12 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. அந்த ஓவரின் முதல் 3 பந்துகளில் ஷமியால் ரன்கள் சேர்க்க முடியவில்லை.
4வது பந்தில் ஷமி பவுண்டரி விளாச, 5வது பந்தில் 2 ரன்கள் சேர்க்க ஆசைப்பட்டு ஷமி ரன் அவுட்டானார். இதன் காரணமாக இந்திய அணி 259 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனால் வங்கதேசம் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. நடப்பாண்டுக்கான ஆசியக் கோப்பை தொடரில் இந்திய அணி அடையும் முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.