- Advertisement 3-
Homeவிளையாட்டுஇனிமே சோக்கர்னு சொல்லி பாருங்க.. பும்ரா, ஹர்திக் வைத்த ட்விஸ்ட்.. 17 ஆண்டுகள் கழித்து வரலாறு...

இனிமே சோக்கர்னு சொல்லி பாருங்க.. பும்ரா, ஹர்திக் வைத்த ட்விஸ்ட்.. 17 ஆண்டுகள் கழித்து வரலாறு படைத்த ரோஹித் அண்ட் கோ..

- Advertisement 1-

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதிய டி20 உலக கோப்பைத் தொடரின் இறுதி போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த போட்டி மழை காரணமாக பாதிக்கப்படலாம் என்ற சூழலில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நடந்து முடிந்துள்ளது. முன்னதாக இறுதி போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா, பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இங்கே பேட்டிங் ஆடுவதற்கு சிறப்பான ஒரு சூழல் இருந்த நிலையில், 200 ரன்கள் வரை குவிக்க இந்திய அணி முயற்சி செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங் சிறிய இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இரண்டாவது ஓவரில் ரோஹித் ஷர்மா 9 ரன்களில் அவுட்டாக பின்னர் வந்த ரிஷப் பந்த், அதே ஓவரில் டக் அவுட்டாகி ரசிகர்களின் கொந்தளிப்புக்கு காரணமாகி இருந்தார்.

பின்னர் வந்த சூர்யகுமார் யாதவும் மூன்று ரன்கள் மட்டுமே எடுத்து வெளியேற, அக்சர் படேல் 5வது வீரராக களமிறங்கி வியப்பை ஏற்படுத்தியிருந்தார். மற்ற முன்னணி பேட்ஸ்மேன்களால் முடியாததை தனியாளாக அடித்துக் காட்டிய அவர், 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் சேர்த்திருந்த போது துரதிஷ்டவசமாக ரன் அவுட்டாகி இருந்தார்.

இன்னொரு பக்கம் நிதானமாக ஆடி 50 ரன்கள் கடந்த விராட் கோலி, பின்னர் அதிரடியாக ஆடி 76 ரன்கள் சேர்த்து அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில், இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் சேர்க்க தொடர்ந்து ஆடி இருந்த தென்னாபிரிக்க அணி, ஆரம்பத்தில் இந்தியாவை போல விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், டி காக், ஸ்டப்ஸ், ஹென்றிச் கிளாசன் என வந்தவர்கள் அனைவரும் அதிரடியை காட்ட கடைசி ஐந்து ஓவர்களில் 6 கைவசம் விக்கெட்டுகள் இருக்க, அவர்களின் வெற்றிக்கு 30 ரன்கள் தான் தேவைப்பட்டது.

- Advertisement 2-

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களான அக்சர் படேல் 4 ஓவரில் 49 ரன்களும், குல்தீப் யாதவ் 45 ரன்களும் எடுக்க இதுவே தென்னாபிரிக்க அணிக்கு சாதகமாக அமைந்திருந்தது. இறுதியில் தென்னாபிரிக்க அணியில் அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த கிளாசன், ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட்டாகி இருந்தார். அவர் 27 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, 18 பந்துகளில் 22 ரன்கள் வேண்டுமென்ற நிலை இருந்தது. அப்படி ஒரு விறுவிறுப்பான கட்டத்தில், 18 வது ஓவரை வீசிய பும்ரா, 2 ரன்கள் மட்டுமே கொடுத்து யான்சென் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். அடுத்த 2 ஓவர்களில் 20 ரன்கள் வேண்டுமென்ற நிலை உருவாக, போட்டி இன்னும் பரபரப்பானது. களத்தில் மில்லர் மட்டும் பேட்ஸ்மேனாக இருந்ததுடன் கடைசி 3 ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 10 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது தென்னாபிரிக்க அணி.

இதனால், அவர்கள் மீது அதிக நெருக்கடி இருக்க, அர்ஷ்தீப் சிங் வீசிய 19 வது ஓவரில் 4 ரன்கள் மட்டுமே செல்ல, இந்திய அணியின் கை அதிகம் ஓங்கி இருந்தது. 6 பந்தில் 16 ரன்கள் வேண்டுமென்ற சூழலில், ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரை மில்லர் எதிர்கொண்டார். இதில் முதல் பந்திலேயே மில்லர் அவுட்டாக, அடுத்த 5 பந்துகளில் தென்னாபிரிக்க அணியால் 8 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2 வது முறையாக டி20 உலக கோப்பையை சொந்தமாக்கி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் நீண்ட நாட்களாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்த மோசமான விமர்சனத்தையும் உடைத்து ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி வரலாறு படைத்துள்ளது.

கடைசி ஐந்து ஓவர்களில் தலா 2 ஓவர்கள் வீசியிருந்த பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மொத்தமாக 4 விக்கெட் எடுத்தது தான் போட்டியின் திருப்புமுனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்