- Advertisement -
Homeவிளையாட்டுஅந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கப்பா.. உலகக்கோப்பைக்கு முக்கிய இளம் வீரர்.. திடீரென எழுந்த கலகக் குரல்

அந்த தங்கத்த தூக்கிட்டு வாங்கப்பா.. உலகக்கோப்பைக்கு முக்கிய இளம் வீரர்.. திடீரென எழுந்த கலகக் குரல்

- Advertisement-

கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரில் இங்கிலாந்து நாட்டில் கொண்டு வரப்பட்ட விதிமுறை மாற்றத்தால், கவுண்டி கிரிக்கெட்டில் அபாரமாக செயல்பட்டு வந்த ஆர்ச்சர் உடனடியாக இங்கிலாந்து அணிக்குள் வந்தார். மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் பந்துவீசும் திறமையால் ஆர்ச்சரின் செயல்பாடு அபாரமாக இருந்தது.

இங்கிலாந்து அணிக்காக ஆடிய முதல் உலகக்கோப்பைத் தொடரிலேயே கோப்பையை வென்று கொடுத்தார். இங்கிலாந்து அணி 45 ஆண்டு கால கனவை தனியொருவராக சாதித்து காட்டினார். இவரை யாருக்கு பதிலாக வேண்டுமானாலும் இங்கிலாந்து அணிக்கு கொண்டு வாருங்கள் என்று பீட்டர்சன் உட்பட முன்னாள் வீரர்கள் பலரும் ஆரவாரமாக கூறினர்.

கிட்டத்தட்ட அதேபோன்ற ஒரு கருத்துகளை தான் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பேச தொடங்கியுள்ளனர். இந்திய அணிக்காக ஆடிய 3 டி20 போட்டிகளிலேயே தன்னை உலகக்கோப்பைத் தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்று தனக்கு பேட்டிங் மூலம் திலக் வர்மா செயல்பட்டுள்ளார்.

3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள திலக் வர்மா, ஒரு அரைசதம் உட்பட 139 ரன்களை குவித்துள்ளார். இவர் குறித்து அஸ்வின் கூறும் போது, உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் திலக் வர்மாவுக்கும் இடமளிப்பது குறித்து தேர்வுக் குழு பரிசீலிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் டாப் 7 பேட்ஸ்மேன்களில் ஜடேஜா மட்டுமே இடதுகை பேட்ஸ்மேனாக இருக்கிறார்.

- Advertisement-

இதனால் திலக் வர்மாவின் வரவு இந்திய அணிக்கு பயனளிக்கலாம். குறைந்த போட்டிகளில் ஆடி இவ்வளவு பெரிய முதிர்ச்சியை வேறு எந்த வீரரும் வெளிப்படுத்தியதே இல்லை என்று புகழ்ந்துள்ளார். அதேபோல் முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசும் போது, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் காயத்தில் இருந்து விடுபடாமல் இருந்தால், ஏன் திலக் வர்மாவுக்கு வாய்ப்பளிக்க கூடாது.

ஐதராபாத்தை சேர்ந்த வீரரான திலக் வர்மா, முதல்தர போட்டிகளில் ஆடியுள்ள 25 போட்டிகளில் 5 சதங்கள், 5 அரைசதங்கள் விளாசி இருக்கிறார். அவரின் பேட்டிங் சராசரி 56.18ஆக இருக்கிறது. இதன் மூலம் பெரிய இன்னிங்ஸை விளையாடக் கூடிய வீரராக இருக்கிறார் என்பது கண்கூடாக இருக்கிறது. ஒருவேளை ஸ்ரேயாஸ் ஐயர் இல்லையென்றால், திலக் வர்மாவை இந்திய அணி களமிறங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

சற்று முன்