இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நேற்று பெங்களூரில் எஸ்எஎஃப்எஃப் சாம்பியன்ஷிப் கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் மோசமான ஒரு சண்டையில் ஈடுபட்டது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் வீரரான அப்துல்லா இக்பால் துரோ-இன் செய்ய முயன்ற போது இந்திய அணியின் கோச் ஸ்டிமாக் அதை எதிர்க்கு வகையில் இக்பாலின் அருகில் சென்று பந்தை தட்டி விட்டு அதை கைப்பிற்றினார். அதனால் இக்பாலால் துரோ-இன் செய்ய முடியவில்லை. அதனை தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஸ்டிமாக் மற்றும் இக்பாலை சூழ்ந்தனர். அங்கு உடனே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்த ஒரு சூழலில் ஸ்டிமாக்கால் தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அதன் காரணமாக அவர் தொடர்ச்சியான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் ஸ்டிமாக்கை சாந்தப்படுத்தும் முயன்றார். ஒரு கட்டத்தில் ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
அதேசமயம் பாகிஸ்தான் பயிற்சியாளருக்கு எல்லோ கார்டு கொடுக்கப்பட்டது. ஸ்டிமாக் வெளியேறிய பிறகு துணை பயிற்சியாளர் மகேஷ் இந்திய அணியை வழிநடத்த துவங்கினார். இந்த போட்டியை பொறுத்தவரை
இந்திய அணியின் வீரரான சுனில் சேத்ரி சிறப்பாக விளையாடி 3 கோல்களை இந்திய அணிக்காக அடித்தார்.
ஆட்டத்தின் முதல் பாதையில் இந்தியா இரண்டுக்கு கோல் அடித்திருந்த நிலையில் பாக்கிஸ்தான் தன்னுடைய கணக்கை துவங்காமலேயே இருந்தது. ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் சுனில் மேலும் ஒரு கோல் அடிக்க ஆட்டம் மேலும் பரபரப்பை எட்டியது. அட்டா முடிவில் இந்திய அணி 4 கோல்களை அடித்து 4குக்கு 0 என்ற கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது.
இந்த போட்டியை பொறுத்தவரை கால் பந்தத்திற்கு உரிய அணைத்து அம்சங்களையும் பெற்றிருந்தது. கிரிக்கெட் போட்டியில் தான் இரு நாட்டு வீரர்களும் ஆக்ரோஷமாக இருக்கிறார்கள் என்றால் கால் பந்து போட்டியிலும் தற்போது அதே ஆக்ரோஷம் தொடர்கிறது.