- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த தடவ மிஸ்ஸே ஆகல.. அசத்திய கில், ருத்து.. பெட்டி பாம்பாய் அடங்கிப் போன ஜிம்பாப்வே..

இந்த தடவ மிஸ்ஸே ஆகல.. அசத்திய கில், ருத்து.. பெட்டி பாம்பாய் அடங்கிப் போன ஜிம்பாப்வே..

- Advertisement-

இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதிய டி 20 போட்டித் தொடரில் முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் மோதிய 3 வது போட்டியும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக, முதல் போட்டியில் பேட்டிங்கில் தடுமாற்றம் கண்டிருந்த இந்திய அணி, 2 வது போட்டியில் அதனை சரி செய்து கொண்டு களமிறங்கி இருந்தது.

இதனிடையே, சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இணைந்ததால் துருவ் ஜூரேல், முகேஷ் குமார் மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கு 3 வது போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. தொடர்ந்து, 3 வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கில் பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

- Advertisements -

அதன்படி, கில் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கி இருந்தனர். இருவரும் நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுக்க, இந்திய அணி முதல் விக்கெட்டிற்கு 67 ரன்கள் சேர்த்திருந்தது. ஜெய்ஸ்வால் 36 ரன்களும், கில் 66 ரன்களும் எடுத்து அவுட்டாக, 3 வது வீரராக உள்ளே வந்த ருத்துராஜும் முந்தைய போட்டியை போல சிறப்பாக ஆடி ரன் சேர்த்தார்.

தேவைப்படும் நேரத்தில் பவுண்டரிகளையும் எடுத்து ரன் சேர்த்த அவர், 28 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடத் தொடங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆவேஷ் கான் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் செக் வைத்தனர். இதனால், 39 ரன்கள் சேர்ப்பதற்கும் 5 விக்கெட்டுகளையும் அவர்கள் இழந்திருந்தனர்.

- Advertisement-

ஜிம்பாப்வே அணியின் வெற்றி வாய்ப்பு குறைந்து கொண்டே இருந்தாலும் 6 வது விக்கெட்டிற்கு டியான் மேயர்ஸ் மற்றும் கிளைவ் மடன்டே இணைந்து 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததால் ஓரளவுக்கு கவுரமான ஸ்கோரையும் எட்டினர். 37 ரன்களில் கிளைவ் அவுட்டாக, மேயர்ஸ் 50 ரன்களை கடந்திருந்தார்.

இருந்தாலும் ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால் 23 ரன்கள் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக இரண்டாவது வெற்றியை பதிவு செய்த இந்திய அணி, தொடரிலும் முன்னிலை வகித்து ஜிம்பாப்வே அணிக்கு நெருக்கடி கொடுத்துள்ளது.

சற்று முன்