- Advertisement -
Homeவிளையாட்டுஇலங்கைக்கு எதிரான தொடரில் கே எல் ராகுல் இருந்தும்.. கில்லிற்கு கிடைத்த ப்ரமோஷன்.. முதல் பாலே...

இலங்கைக்கு எதிரான தொடரில் கே எல் ராகுல் இருந்தும்.. கில்லிற்கு கிடைத்த ப்ரமோஷன்.. முதல் பாலே சிக்ஸர் அடித்த கம்பீர்..

- Advertisement-

இந்திய கிரிக்கெட் அணி உலக கோப்பையை வென்றிருந்த நிலையில், இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்து முடிந்த ஜிம்பாப்வே அணிக்கு எதிராக டி20 தொடரையும் இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி வென்று அசத்தி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக ஜூலை 27ஆம் தேதி இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்களும் ஆரம்பமாக உள்ளது. இதனிடையே, இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இருந்து செயல்பட உள்ளார் என்றும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.

அவரது பயிற்சி காலத்தில் இந்திய அணி எப்படியான வீரர்களை தேர்வு செய்து ஆடும் என்பது மிகப்பெரிய ஆவலை ஏற்படுத்தி இருந்த நிலையில், தற்போது இலங்கைக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடருக்கான இந்திய அணியையும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதில் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில், டி20 போட்டிகளில் இருந்து ஓய்வினை அறிவித்த கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் மீண்டும் இடம் பிடித்துள்ளனர். அதே போல, டி20 உலக கோப்பை தொடரில் இடம் பெறாமல் போன கே எல் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர் உள்ளிட்ட பலரும் ஒரு நாள் போட்டித் தொடரில் இடம் பெற்றுள்ள நிலையில் டி20 போட்டிகளில் ஆடி வந்த ஷிவம் துபேவுக்கும் ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement-

இதை தவிர ஐபிஎல் தொடரில் கலக்கியிருந்த இளம் வீரர் ஹர்ஷித் ராணாவுக்கு ஒரு நாள் தொடரில் வாய்ப்பு கிடைத்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும் அவரை போலவே ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடி வந்த ரியான் பராக்கும் ஒரு நாள் அணியில் இடம் பிடித்துள்ளார்.

இதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதமாக சுப்மன் கில்லிற்கு துணை கேப்டன் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல, பந்து வீச்சாளர் பும்ரா தொடர்ந்து ஓய்வில் இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோரும் ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாமல் போனது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணி :

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, கே எல் ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், ரியான் பராக், அக்சர் படேல், கலீல் அகமது, ஹர்ஷித் ராணா

சற்று முன்