- Advertisement 3-
Homeவிளையாட்டுகில் கேப்டன்.. 2 சிஎஸ்கே வீரர்களுக்கு வாய்ப்பு.. ஆனாலும் அந்த தமிழக வீரர் விஷயத்தில் வஞ்சகம்...

கில் கேப்டன்.. 2 சிஎஸ்கே வீரர்களுக்கு வாய்ப்பு.. ஆனாலும் அந்த தமிழக வீரர் விஷயத்தில் வஞ்சகம் செய்த பிசிசிஐ..

- Advertisement 1-

டி20 உலக கோப்பைத் தொடர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் வைத்து நடைபெற்று வரும் நிலையில் ஏறக்குறைய இறுதி கட்டத்தை எட்டி விட்டதாகவே தெரிகிறது. சூப்பர் 8 சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்க அடுத்து அரையிறுதி மற்றும் இறுதி போட்டி பாக்கி உள்ளது. தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் ஒரு பிரிவிலிருந்து அரை இறுதி சுற்றுக்கும் முன்னேறி உள்ளது.

இன்னொரு பிரிவில் இருந்து இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளில் இரண்டு அணிகள் முன்னேறும் என்றே தெரிகிறது. இந்திய அணி கடந்த ஆண்டு நடந்த இரண்டு ஐசிசி தொடரை இறுதிப்போட்டியில் இழந்திருந்ததால் இந்த முறை அவர்கள் டி20 உலக கோப்பையை 17 ஆண்டுகள் கழித்து வெல்ல வேண்டும் என்பதுதான் ரசிகர்கள் பலரின் விருப்பமாக உள்ளது.

இதனிடையே, டி20 உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் இந்திய கிரிக்கெட் அணி ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரிலும் ஆட உள்ளது. இதில் உலக கோப்பை தொடரில் ஆடிய ரோஹித் ஷர்மா, பும்ரா, கோலி, ஜடேஜா உள்ளிட்ட பலருக்கும் ஓய்வளிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வந்தது.

அந்த வகையில் தற்போது ஜிம்பாப்வே டி 20 தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. சுப்மன் கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் ஜெய்ஸ்வால், ருத்துராஜ், அபிஷேக் ஷர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், துருவ் ஜூரேல், ரியான் பராக், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான், கலீல் அகமது, முகேஷ் குமார், நிதிஷ் ரெட்டி மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகிய வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.

- Advertisement 2-

இதில் பெரும்பாலான வீரர்களுமே 25 வயதிற்கு குறைவான வீரர்களாக இருக்கும் நிலையில், பலரும் ஐபிஎல் தொடரில் கலக்கியவர்களாவார். நிதிஷ் ரெட்டி, ரிங்கு சிங், துஷார் தேஷ்பாண்டே, அபிஷேக் ஷரமா, ரியான் பராக், கலீல் அகமது என பலரும் ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பி இருந்தவர்கள். இவர்களுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில் இன்னொரு பக்கம் டி20 உலக கோப்பையில் கூட தேர்வாகாமல் போன ஷ்ரேயஸ் ஐயர், கே எல் ராகுல் ஆகியோருக்கு மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கிடைக்காமல் போனது அதிக விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் என்றாலும் நிச்சயம் அந்த இரண்டு வீரர்களுக்கும் வாய்ப்பு கொடுத்திருந்தால் இளம் வீரர்கள் மத்தியில் அனுபவம் வாய்ந்த வீரர்களும் இடம்பெற்றிருப்பார்கள். ஆனால் அவர்களை தேர்வு செய்யாமல் இந்திய அணி நிராகரித்து வருவதால் ரசிகர்கள் இது பற்றிய கேள்விகளையும் எழுப்பி உள்ளனர். இன்னொரு பக்கம் இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரை கொல்கத்தா அணி வெல்ல முக்கிய காரணமாக இருந்த கேப்டன் ஷ்ரேயஸ் ஐயரை இந்திய அணி தொடர்ந்து புறக்கணித்து வரும் காரணமே மர்மமாக தான் உள்ளது.

அவருக்கு சம்பள பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் ஜிம்பாப்வே போன்ற அணிகளுக்கு எதிராக கூட ஆட வைக்கலாம் என்றும் தங்களின் கருத்துக்களை ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர். இதே போல ஐபிஎல் தொடரில் கலக்கிய நடராஜன், திலக் வர்மா உள்ளிட்ட பல வீரர்களுக்கும் அணியில் இடம் கிடைக்கவில்லை.

சற்று முன்