- Advertisement 3-
Homeவிளையாட்டுஎங்க இலக்கே வேற... இந்திய அணிக்கு இப்படி ஒரு பெரிய பிளஸ் இருக்கு... அஸ்மத்துல்லா கிட்ட...

எங்க இலக்கே வேற… இந்திய அணிக்கு இப்படி ஒரு பெரிய பிளஸ் இருக்கு… அஸ்மத்துல்லா கிட்ட இதை நான் சொன்னன் – ஆப்கான் கேப்டன் சோகம்

- Advertisement-

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டன் ஷாகித் 80 ரன்களும், அஸ்மதுல்லா 62 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

சவாலான இலக்காக பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் கூட்டணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 30 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதனால் 10 ஓவர்களிலேயே இந்திய அணியின் ஸ்கோர் 95 ரன்களாக இருந்தது. இதன்பின் சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 63 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார்.

- Advertisements -

இறுதியாக இந்திய அணி 35 ஓவர்களில் இலக்கை எட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. ரோகித் சர்மா 131 ரன்களும், விராட் கோலி 55 ரன்களும், இஷான் கிஷன் 47 ரன்களும் சேர்த்தனர். இதன் மூலம் ஆஃப்கானிஸ்தான் அணி ஆடிய இரண்டு போட்டியிலும் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இந்த தோல்வி குறித்து ஆஃப்கானிஸ்தான் கேப்டன் ஷாகிதி பேசும் போது, நாங்க்லள் பேட்டிங் செய்யும் போது இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பையும் மனதில் வைத்து விளையாடினோம். ஏனென்றால் இந்திய அணிக்கு மிகப்பெரிய பேட்டிங் லைன் அப் உள்ளது. அதனால் 300 ரன்களாவது இலக்காக நிர்ணயிக்க வேண்டும் என்று எண்ணினோம். ஆனால் சில விக்கெட்டுகளை வேகமாக பறிகொடுத்ததால், நினைத்த இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

- Advertisement-

இந்த பிட்ச் பேட்டிங் செய்ய நன்றாக உள்ளது. பேட்டிங் செய்து எதிரணிக்கு அழுத்தம் கொடுப்பதே எங்களின் திட்டமாக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விட்டது எங்கள் ஸ்கோர் குறைய காரணமாகியது. 3 விக்கெட்டுகளை இழந்த பின், அஸ்மத்துல்லாவிடம் டாட் பால்கள் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று கூறினேன். ஏனென்றால் எங்களால் கடைசி நேரத்தில் அதிரடியாக ரன்கள் சேர்க்க முடியும்.

அதனால் பார்ட்னர்ஷிப் அமைப்பதே எங்களின் நோக்கமாக இருந்தது. இன்னும் எங்களுக்கு 7 போட்டிகள் மிஞ்சமிருக்கிறது. அந்த போட்டிகளை எதிர்கொள்ள நிச்சயம் தயாராக இருக்கிறோம். எங்களின் தவறுகளில் இருந்து பாடம் கற்று, அடுத்தடுத்த போட்டிகளில் திருத்திக் கொண்டு வெற்றிபெறுவோம் என்று தெரிவித்துள்ளார்.

சற்று முன்