- Advertisement 3-
Homeவிளையாட்டுபழிக்கு பழி வாங்கியாச்சு.. மீண்டும் பயம் காட்டிய ஹெட்.. பவுலிங் தாண்டி இந்தியா ஜெயிக்க காரணமா...

பழிக்கு பழி வாங்கியாச்சு.. மீண்டும் பயம் காட்டிய ஹெட்.. பவுலிங் தாண்டி இந்தியா ஜெயிக்க காரணமா இருந்த விஷயம்..

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் சமீபத்தில் சூப்பர் 8 சுற்றில் மோதி இருந்த போட்டி, மிக மிக விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்திய அணிக்கு அரை இறுதி வாய்ப்பு அந்த அளவுக்கு கடினமானதாக இல்லை என்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வி அடைந்தாலும் முன்னேறி விடலாம் என்ற நிலை தான் இருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய அணி நிச்சயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற ஒரு சூழலில் இருக்க, டாஸ் வென்ற மிட்செல் மார்ஷ் பந்துவீச்சை தேர்வு செய்திருந்தார்.

அதன்படி ஆடிய இந்திய அணியில் கோலி டக் அவுட்டானாலும் மற்றொரு தொடக்க வீரரான ரோகித் சர்மா நங்கூரம் போல நிலைத்து நின்று ஆடியிருந்தார். கிடைக்கும் பந்துகளை எல்லாம் சிக்ஸர், ஃபோர்களுக்கு பறக்கவிட்டுக் கொண்டே இருக்க, இந்திய அணி நூறு ரன்களைக் கடந்த போதே ரோஹித்தும் ஏறக்குறைய 70 ரன்களுக்கு மேல் சேர்த்துவிட்டார்.

- Advertisements -

இந்த முறை 150 ரன்கள் கடப்பதற்கான ஆட்டத்தையும் அவர் வெளிப்படுத்தி வந்த நிலையில் தான் துரதிர்ஷ்டவசமாக 92 ரன் எடுத்திருந்த போது ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். 41 பந்துகளில் 92 ரன்களை சேர்த்த ரோஹித், 8 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான பங்களிப்பை அளித்ததால் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை சேர்த்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் முதல் ஓவரிலேயே வார்னர் 6 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்திருந்தார். ஆனால் இதன் பின்னர் கைகோர்த்த ஹெட் மற்றும் மார்ஷ் ஆகியோர் இணைந்து அதிரடி காட்டியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோய் விடுமோ என்ற அச்சமும் உருவானது.

- Advertisement-

மிட்செல் மார்ஷ் 37 ரன்கள் எடுத்து அவுட்டாக பின்னர் வந்த மேக்ஸ்வெல் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஸ்டாய்னிஸ் 2 ரன்களில் அவுட் ஆனாலும், ஒரு பக்கம் தனியாளாக நின்று இந்திய அணியின் பந்துவீச்சாளரை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தார் ஹெட். இதனால் அவர்களது வெற்றி வாய்ப்பு அருமையாக தான் இருந்தது.

இதனிடையே 15 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் கடைசி 30 பந்துகளில் அவர்களின் வெற்றிக்கு 65 ரன்கள் வேண்டும் என்ற சூழலும் உருவாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த ஹெட் விக்கெட்டை பும்ரா எடுக்க, போட்டியும் இந்திய அணியின் பக்கம் மாறி இருந்தது.

இறுதியில் ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 181 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெல்ல, இந்த போட்டியில் ஃபீல்டர்கள் சிறப்பாக செயல்பட்டிருந்ததும் வெற்றிக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவின் அரையிறுதி வாய்ப்பும் மங்கிப் போயுள்ளது.

ஒரு வேளை ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால், ஆஸ்திரேலிய அணி வெளியேற கூடும். அதே வேளையில், அவர்கள் தோல்வி அடைந்தால் ஆஸ்திரேலிய அணி அரைஇறுதி முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்