- Advertisement 3-
Homeவிளையாட்டுசிஎஸ்கே வீரர் உதவியுடன் ஆப்கானிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி.. ஆரம்பமே அமர்க்களம் தான்..

சிஎஸ்கே வீரர் உதவியுடன் ஆப்கானிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய அணி.. ஆரம்பமே அமர்க்களம் தான்..

- Advertisement 1-

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிய முதல் டி 20 போட்டி தற்போது முடிவுக்கு வந்துள்ளது. சுமார் ஒரு வருடத்திற்கு பிறகு ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இணைந்த டி 20 தொடர் என்ற கவனம் ஒரு பக்கம் இருக்க, டி 20 உலக கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணி ஆடும் கடைசி டி 20 தொடராகவும் அமைந்துள்ளது.

தொடர்ந்து, ஐபிஎல் தொடரில் இருந்து பல இளம் வீரர்களும் கூட இந்திய அணிக்காக ஆடி வருவதால், டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் ஆடும் வீரர்கள் விவரமும் இந்த தொடர் முடிவடையும் சமயத்தில் ஓரளவுக்கு ரசிகர்களால் கணித்து விடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மொஹாலி மைதானத்தில் மோதி இருந்தது.

இந்த தொடரில் இடம்பிடித்திருந்த விராட் கோலி, சில தனிப்பட்ட காரணங்களுக்காக முதல் டி 20 போட்டியில் மட்டும் களமிறங்க மாட்டார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல, ஆப்கானிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ரஷீத் காணும் காயம் காரணமாக இந்த தொடரில் இடம்பிடிக்கவில்லை. இந்த நிலையில், இரு அணிகளும் முதல் டி 20 போட்டியில் மோதி இருந்தது.

இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா, பந்து வீச்சைத் தேர்வு செய்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆடியது. அப்படி இருந்தும் நடுவில் சில விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ, சற்று தடுமாற்றம் கண்ட அணியை ஓரளவுக்கு தூக்கி நிறுத்தினார் சீனியர் வீரர் முகமது நபி. 27 பந்துகளில் 2 ஃபோர்கள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்திருந்த நபி, 42 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

- Advertisement 2-

ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்திருந்தது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஷிவம் துபே 1 விக்கெட்டையும் கைப்பற்றி இருந்தார். தொடர்ந்து ஆடிய இந்திய அணிக்கு முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு ரன் கூட சேர்க்காமல் ரன் அவுட்டாகி வந்த வேகத்தில் கிளம்பினார் ரோஹித் ஷர்மா. தொடர்ந்து, மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில்லும் அவுட்டாக, இந்திய அணி 28 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

இதனால், போட்டியும் விறுவிறுப்பை அதிகரிக்க இரு அணிகளும் பயங்கரமாக மோதிக் கொண்டது. அப்படி இருக்கையில், ஷிவம் துபே சிறப்பாக ஆடி இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். பந்து வீச்சில் ஒரு விக்கெட்டை எடுத்திருந்த துபே, பேட்டிங்கிலும் அரைச்சதமடித்து பட்டையை கிளப்பினார். கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்த ஷிவம் துபே, 40 பந்துகளில் 5 ஃபோர்கள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 60 ரன்கள் எடுத்து இந்திய அணி 18 வது ஓவரிலேயே இலக்கை எட்டவும் உதவி செய்திருந்தார். இதனால், இந்திய அணியும் 1 – 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது.

சற்று முன்