- Advertisement 3-
Homeவிளையாட்டுவேற லெவல் ஆட்டம்... திணறிய நேபாள் பவுலர்கள்... சுத்துப்போட்ட ரோகித், கில்... பாயிண்ட்ஸ் டேபிளில் இந்திய...

வேற லெவல் ஆட்டம்… திணறிய நேபாள் பவுலர்கள்… சுத்துப்போட்ட ரோகித், கில்… பாயிண்ட்ஸ் டேபிளில் இந்திய அணியின் இடம் என்ன?

- Advertisement-

சர்வதேச கிரிக்கெட்டில் நேபாள அணிக்கு எதிராக இந்திய அணி முதல்முறையாக களமிறங்கியது. இந்தப் போட்டியில் வென்றால் மட்டுமே, ஆசியக் கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் நேபாள அணியுடனான போட்டியில் இந்திய அணியின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நிலையில், இந்தப் போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தப் போட்டியில் பும்ரா மும்பை திரும்பியதால், வேகப்பந்துவீச்சாளர் ஷமி இடம்பெற்றார். இதையடுத்து பேட்டிங் செய்த நேபாள அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 65 ரன்கள் சேர்த்து மிரள வைத்தது.

- Advertisements -

இதற்கு இந்திய வீரர்களின் சொதப்பலான பீல்டிங்கும் முக்கியக் காரணம். இறுதியாக 48.2 ஓவர்களில் நேபாள அணி 230 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. நேபாள அணி தரப்பில் ஆசிஃப் 97 பந்துகளில் 58 ரன்களும், சோம்பால் 56 பந்துகளில் 48 ரன்களும், தொடக்க வீரர் குஷல் 25 பந்துகளில் 38 ரன்களும் சேர்த்தனர். இந்திய அணியில் ஜடேஜா, சிராஜ் இருவரும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதன்பின் இந்திய அணி 231 ரன்களை இலக்கை சேஸிங் செய்ய தொடங்கியது. 2.1 ஓவர்களில் இந்தியா 17 ரன்கள் எடுத்த நிலையில், மீண்டும் மழை குறுக்கிட்டது. பின்னர் இரவு 10.15 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெற 23 ஓவர்களில், 145 ரன்கள் குவிக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

- Advertisement-

பின்னர் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி வேற மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பேடில் ஸ்வீட், டவுன் தி ட்ராக் சிக்ஸ், புல் ஷாட் என்று விண்டேஜ் ரோகித் சர்மா வெளிவந்தார். இதனால் 49 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதேபோல் பவுண்டரிகளாக விளாசிய சுபன் கில் 47 பந்துகளில் அரைசதம் கடந்தார்.

இதன் காரணமாக இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை எட்டி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் இந்திய அணி ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குரூப் ஏ பிரிவில் இருந்த இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. முதலிடத்தில் பாகிஸ்தான் அணியும், இரண்டாமிடத்தில் இந்தியாவும் புள்ளிப்பட்டியலில் உள்ளன.

சற்று முன்