- Advertisement -
Homeவிளையாட்டுநியூசிலாந்து அணியுடன் தரமான ஆட்டம்.. கடைசியில் பரபரப்பை கூட்டிய விராட் கோலி.. புள்ளிப்பட்டியலில் உச்சம் தொட்ட...

நியூசிலாந்து அணியுடன் தரமான ஆட்டம்.. கடைசியில் பரபரப்பை கூட்டிய விராட் கோலி.. புள்ளிப்பட்டியலில் உச்சம் தொட்ட இந்தியா

- Advertisement-

உலககோப்பை தொடரின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 19 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அப்போது இணைந்த ரச்சின் ரவீந்திரா – டேரில் மிட்சல் கூட்டணி நியூசிலாந்து அணியை மீட்டது.

சிறப்பாக ஆடிய மிட்சல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் விளாசினர். இதன் காரணமாக நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. கடைசி நேரத்தில் களமிறங்கிய வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

இதனை தொடர்ந்து இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 71 ரன்கள் சேர்த்த நிலையில், ரோகித் சர்மா 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்கு பின் சுப்மன் கில்லும் 26 ரன்களில் நடையை கட்டினார். இதனால் இந்திய ஆணி 76 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அப்போது விராட் கோலி நிதானமாக விளையாட, மறுமுனையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் 16வது ஓவரின் போதே 100 ரன்களை கடந்தது. ஆனால் ஸ்ரேயாஸ் ஐயர் 33 ரன்களில் ஆட்டமிழக்க, தொடர்ந்து வந்த கேஎல் ராகுல் சான்ட்னர் சுழலில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனிடையே விராட் கோலி அரைசதம் கடந்து நிதானமாக ஆடி வந்தார்.

- Advertisement-

ஆனால் தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவ் 2 ரன்களில் ரன் அவுட்டாகி ஆட்டமிழகக், ஆட்டம் பரபரப்பானது. இதனால் 191 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் வந்த ஜடேஜா எந்த ரிஸ்கையும் எடுக்காமல் சில பவுண்டரிகளை விளாசினார். இதனால் இந்திய அணி வெற்றிக்கு கடைசி 28 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்டது.

இதனை தொடர்ந்து விராட் கோலி சிக்ஸ், பவுண்டரி என்று வெளுத்து கட்டினார். இதனால் விராட் கோலி சதமடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால் சிக்சர் அடிக்க முயற்சித்து விராட் கோலி 95 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஜடேஜா பவுண்டரி விளாசி அம்னொஇயை வெற்றிபெற வைத்தார். இதன் மூலம் இந்திய அணி வெற்றிபெற்றதோடு, புள்ளிப்பட்டியலிலும் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

சற்று முன்