- Advertisement 3-
Homeவிளையாட்டுகடைசி ஓவரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடுப்பான ஆஸி. கேப்டன் மேத்யூ வேட்.. இதுனால தான்...

கடைசி ஓவரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கடுப்பான ஆஸி. கேப்டன் மேத்யூ வேட்.. இதுனால தான் இந்தியா ஜெயிச்சுதா..

- Advertisement-

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடைபெற்று வந்த டி 20 தொடரை இந்திய அணி வென்றிருந்தது. நான்கு போட்டிகளின் முடிவில் இந்திய அணி தொடரை கைப்பற்றி இருந்த சூழலில், இரு அணிகளும் ஐந்தாவது மற்றும் கடைசி டி 20 போட்டியில் மோதி இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மேத்யூ வேட், டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி ஆடிய இந்திய அணியில் இதுவரை ஜொலித்த இளம் வீரர்கள் அதிகம் ரன் சேர்க்காமல், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து நடையைக் கட்டினர். தொடக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ருத்துராஜ் ஆகியோர் முறையே 21 மற்றும் 10 ரன்களில் ஆட்டமிழந்தனர். அதே போல, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 5 ரன்களிலும், ரிங்கு சிங் 6 ரன்களிலும் அவுட்டாகினர். தனியாளாக போராடிய ஷ்ரேயஸ் ஐயர், 37 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதிக் கட்டத்தில் ஜிதேஷ் ஷர்மா மற்றும் அக்சர் படேல் ஆகியோர் ஓரளவுக்கு கைகொடுக்க இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.

- Advertisements -

இந்த தொடரில் முதல் 3 போட்டிகளில் 200 ரன்களுக்கு மேல் குவித்திருந்த இந்திய அணி, நான்காவது போட்டியில் 174 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, இந்த தொடரில் இந்திய அணி பதிவு செய்த குறைந்தபட்ச ஸ்கோராக கடைசி போட்டியில் அடித்த 160 ரன்கள் அமைந்திருந்தது. பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்பத்தில் அதிரடியாக ஆடி ரன் குவித்தாலும் சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் சூழலில் சிக்கி முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

ஆனாலும் கடைசி கட்டத்தில் இரு அணிகளுக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கும் வகையில் தான் போட்டி விறுவிறுப்பாக சென்ற வண்ணம் இருந்தது. இதற்கு காரணம், ஆஸ்திரேலிய அணி வீரர் பென் மெக்டெர்மோட் சிக்ஸர்களை பறக்க விட்டது தான். 36 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் அவர் 54 ரன்கள் எடுத்து அர்ஷ்தீப் சிங் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

- Advertisement-

இதனைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இருந்த போதும் அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை முகேஷ் குமார் சாய்க்க, போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பியது. ஆனால், கேப்டன் மேத்யூ வேட் தனியாளாக நின்று போராட, கையில் 3 விக்கெட்டுகள் இருந்த சூழலில், இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது.

19 வது ஓவரில் 7 ரன்கள் சேர்க்கப்பட, கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை அர்ஷ்தீப் சிங் வீச, முதல் இரண்டு பந்துகளும் டாட் பாலாக அமைந்தது. ஆனால் இதன் முதல் டாட் பந்து, வைடு பாலாக சென்றது போல தெரிய மேத்யூ வேட், நடுவரிடம் முறையிட்டார். ஆனாலும் வைடு கொடுக்கப்படாத சூழலில், அவர் சற்று ஆவேசம் அடைந்ததாகவும் தெரிகிறது. தொடர்ந்து, மூன்றாவது பந்தில் சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேடு அவுட்டாக, ஒட்டுமொத்த மைதானமும் ஆர்ப்பரித்தது. அடுத்த 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட, இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4 – 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றுள்ளது.

இந்த தொடரை அசத்தலாக ஆடியுள்ள இந்திய அணி, அடுத்ததாக தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி 20, 3 ஒரு நாள் போட்டி தொடர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்