- Advertisement 3-
Homeவிளையாட்டுசொதப்பிய டாப் ஆர்டர் பேட்டிங்.. தனியாளா காப்பாற்றிய சூர்யா.. பந்து வீச்சால் மீண்டும் இந்தியா ஜெயிச்சது...

சொதப்பிய டாப் ஆர்டர் பேட்டிங்.. தனியாளா காப்பாற்றிய சூர்யா.. பந்து வீச்சால் மீண்டும் இந்தியா ஜெயிச்சது எப்படி..

- Advertisement 1-

டி 20 உலக கோப்பையின் லீக் சுற்றில் 3 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று சும்மா கெத்தாக சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேற்றம் கண்டிருந்தது இந்திய கிரிக்கெட் அணி. மேலும் இந்திய அணி குரூப் ஒன்றில் இடம் பிடிக்க இவர்களுடன் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இடம் பிடித்திருந்தது. இந்திய அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ஏறக்குறைய எளிதாக இருந்தாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணியை சரியாக கணித்துவிடவும் முடியாது.

அவர்களுக்கு எதிராக வெற்றி பெற்று விடலாம் என நாம் நினைக்கும் போது நிச்சயம் ஏதாவது ஒரு திருப்புமுனை அரங்கேறி அதிர்ச்சியையும் இந்த இரண்டு அணிகள் அளிப்பார்கள். அப்படி ஒரு சூழலில் தான் இந்திய அணி தங்களின் முதல் சூப்பர் 8 போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை சந்தித்திருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்திருந்தார்.

இங்குள்ள பிட்ச்கள் பெரிய அளவில் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாமல் போவதுடன் போட்டி செல்ல செல்ல பந்து வீச்சுக்கு தான் அதிக விக்கெட் எடுக்கவும் வாய்ப்பு உள்ளதாக மாறும். இதனை கருத்தில் கொண்டு இந்திய அணியும் முதலில் பேட்டிங் செய்ய ரோஹித் ஷர்மா 8 ரன்களில் அவுட்டாகி இருந்தார். வழக்கம் போல பெரிய அளவில் ரன் வைக்காமல் இருந்து வந்த கோலியும் 24 ரன்களில் அவுட்டாக அவரைத் தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 20 ரன்களிலும், ஐந்தாவது வீரராக வந்த ஷிவம் துபே 10 ரன்களிலும் அவுட்டாகி இருந்தனர்.

90 ரன்களில் நான்கு விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தவித்துக் கொண்டிருக்க அப்போது கைகோர்த்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் மிகச்சிறப்பாக ஆடி இந்திய அணி நல்ல ஸ்கோரை எட்டவும் உதவியிருந்தனர். அதிலும் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமார், 28 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து அவுட்டாகி இருந்தார்.

- Advertisement 2-

கடினமான பிட்ச்சிலும் இவரது பேட்டிங் சிறப்பாக இருந்ததால் அனைவருமே அவரது பேட்டிங்கை பாராட்டியுள்ளனர். தொடர்ந்து ஹர்திக் பாண்டியாவும் 32 ரன்கள் எடுத்து அவுட்டாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான் அணி முதல் ஓவரை அதிரடியாக தொடங்கி இருந்தாலும் பும்ரா தனது முதல் ஓவரிலேயே திருப்புமுனையை ஏற்படுத்தி இருந்தார். இதன் பின்னர் அதிலிருந்து மீள முடியாமல் தவித்த ஆப்கானிஸ்தான அணி, 23 ரன்கள் சேர்ப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்திருந்தது.

இதனைத் தொடர்ந்து சிறிய இடைவேளையில் முக்கிய விக்கெட்டுகள் விழ, கடைசி ஐந்து ஓவர்களில் 81 ரன்கள் வேண்டும் என்ற நிலையும் ஆப்கானிஸ்தானுக்கு உருவாகியிருந்தது. இதன் பின்னர் அவர்களால் பெரிய அளவில் ரன் சேர்க்க முடியாமல் போக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தும் திணறி இருந்தது. கடைசி பந்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆப்கானிஸ்தான் அணி, 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

இதனால் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற, பும்ரா 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தி இருந்தார். அவரை போல அர்ஷ்தீப் சிங்கும் 3 விக்கெட்டுகளை எடுத்திருந்த நிலையில், மீண்டும் ஒரு முறை பந்து வீச்சை நம்பி வெற்றி பெற்றுள்ள இந்திய அணி, தங்களின் அடுத்த போட்டியில் பங்களாதேஷ் அணியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்