- Advertisement 3-
Homeவிளையாட்டுஇந்த 2 விஷயம்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு சூப்பர் 8 சுற்றில் காத்திருக்கும் பெரிய ஆப்பு.....

இந்த 2 விஷயம்.. இந்திய கிரிக்கெட் அணிக்கு சூப்பர் 8 சுற்றில் காத்திருக்கும் பெரிய ஆப்பு.. எப்படி சமாளிக்க போறாங்களோ..

- Advertisement 1-

டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டி உள்ள நிலையில் இனிமேல் தான் ஆட்டமே ஆரம்பிக்க போகிறது. ஒரு சில போட்டிகள் மட்டுமே லீக் சுற்றில் மீதமிருக்கும் நிலையில், பொதுவாக ஐசிசி தொடர்களின் லீக் சுற்றில் சிறிய அணிகள் அதிகம் இடம் பிடித்திருப்பதால் இந்தியா உள்ளிட்ட சில அணிகளுக்கு அடுத்த சுற்று என்பது எளிதாக இருக்கும்.

ஆனால் இந்த முறை அமெரிக்கா, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் என எதிர்பாராத அணிகளின் ஆட்டத்தால் நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. மேலும் இதில் சில அணிகள் சூப்பர் 8 சுற்றிற்கும் முன்னேறி உள்ள சூழலில் தான், டி20 உலக கோப்பைத் தொடரின் முக்கியமான ஒரு கட்டம் ஆரம்பிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட அணிகள் ஒரே பிரிவிலும், சவுத் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட அணிகள் மற்றொரு பிரிவிலும் இருக்கும் சூழலில், அனைத்து போட்டிகளுமே பட்டையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் லீக் போட்டிகளை பொறுத்தவரையில் இந்திய அணி பேட்டிங்கில் பெரிய அளவில் தடுமாற்றத்தை கண்டிருந்தாலும், ஒரு குறை கூட இல்லாமல் மிக சிறப்பாக செயல்பட்டு வந்தது. நியூயார்க் மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இனி வரும் போட்டிகளில் நிச்சயம் பேட்டிங்கில் இந்திய அணி கம்பேக் கொடுக்க வேண்டும் என்ற இக்கட்டான சூழலிலும் உள்ளது.

- Advertisement 2-

சூப்பர் 8 சுற்றிலும் பேட்டிங்கில் சொதப்பினால் நிச்சயம் இந்திய அணியின் அரையிறுதிக்கு ஆபத்து உருவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தான் சூப்பர் 8 சுற்றில் இந்திய அணிக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் பற்றி முன்னாள் வீரரான பியூஷ் சாவ்லா சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். “ஆஸ்திரேலிய அணி எப்போதும் ஐசிசி தொடர்களில் மிகவும் ஆபத்தான அணிகளாக தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் எந்த அணிகளைக் கூட அவர்களால் தோற்கடிக்க முடியும்.

அதேபோல ஆப்கானிஸ்தான் அணியிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் மைதானங்களில் அவரது பந்துவீச்சாளர்கள் மிக ரசித்து பந்து வீசவும் செய்துள்ளனர். பங்களாதேஷ் அணி நல்ல கிரிக்கெட்டை ஆடி வந்தாலும் இந்திய அணிக்கு பெரிய போட்டியாக இருக்க மாட்டார்கள். பலம் வாய்ந்த அணிகளில் இருந்து அவர்கள் எங்கோ தூரத்தில் இருக்கிறார்கள். இதனால் குரூப் ஏ நிச்சயம் சிறந்த போட்டி நிறைந்து தா இருக்கும்” என பியூஷ் சாவ்லா கூறி உள்ளார்.

சற்று முன்