- Advertisement 3-
Homeவிளையாட்டு8 வருஷ கோலி கேப்டன்சில கூட அப்படி நடக்கல.. மூன்றே போட்டியில் ரோஹித் தலைமையில் நடந்த...

8 வருஷ கோலி கேப்டன்சில கூட அப்படி நடக்கல.. மூன்றே போட்டியில் ரோஹித் தலைமையில் நடந்த சம்பவம்..

- Advertisement 1-

எந்தவித பிரச்சனையும் இன்றி இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக ஆடிய போதும், கடைசி கட்டத்தில் நடந்த பிழைகள் காரணமாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது. முதல் இரண்டு நாளில் டெஸ்ட் போட்டி முழுக்க முழுக்க இந்திய அணியின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது.

ஆனால் அதன் பின்னர் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டுமே எடுபடாமல் போக, இங்கிலாந்து அணி போட்டியை தங்களுடையதாக்கி வெற்றியும் கண்டு அசத்தியது. முன்னதாக, இங்கிலாந்து அணியின் பேஸ் பால் ஆட்டம், இந்திய மண்ணில் எடுபடாது என்றும் அப்படி அவர்கள் ஆடினால் இந்திய அணிக்கு தான் சாதகம் என்றும் பலர் தங்களின் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.

அப்படி பலர் பேசியதை தங்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விளையாடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணி, முதல் இன்னிங்சில் 436 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் இந்திய அணியின் பக்கம் போட்டியும் பலமாக இருந்த சூழலில் தான், அனைத்தையும் திருப்பி எழுதினார் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஒல்லி போப். இவர் இந்திய அணியின் பந்து வீச்சை லெஃப்ட், ரைட் வாங்க நினைத்த ரன்களை விட, அதிகமாக அதுவும் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி குவித்தது பலரையும் மிரள வைத்தது.

சுழற்பந்து வீச்சுக்கு அதிக சாதகமாக இருக்கும் இந்திய மண்ணில், 196 ரன்கள் அடித்து கிரிக்கெட் அரங்கில் தனி முத்திரை பதித்தார் ஒல்லி போப். தொடர்ந்து 231 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் ஆடியது போல ஆடி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால், வெற்றியும் இங்கிலாந்து பக்கம் செல்ல கடைசியில் அவர்கள் 28 ரன்களில் வென்று தொடரிலும் முன்னிலை வகித்தனர்.

- Advertisement 2-

இந்த நிலையில், ரோஹித் ஷர்மா தலைமையில் இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் மோசமான சாதனை ஒன்று அரங்கேறி உள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் 2022 வரை சுமார் 8 ஆண்டுகள் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டிருந்தார். அந்த சமயத்தில், அதாவது 2013 முதல் 2022 ஆம் ஆண்டு வரை இந்திய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் இரண்டில் மட்டும் தான் இந்திய கிரிக்கெட் அணி தோல்வி அடைந்திருந்தது.

ஆனால், ரோஹித் தலைமையில், இந்திய மண்ணில் அவர்கள் கடைசியாக முடிவு தெரிந்த 3 டெஸ்ட் போட்டிகளிலேயே இரண்டில் தோல்வி கண்டுள்ளது தற்போது கடுமையான விமர்சனத்திற்கும் வழிவகுத்துள்ளது.

சற்று முன்