இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 99 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது.
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த தொடரின் இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 50 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களையும் குதித்தது.
இந்திய அணி சார்பாக ஷ்ரேயாஸ் ஐயர் 105 ரன்களையும், சுப்மன் கில் 104 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 400 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 33 ஓவர்களில் 317 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடியது.
ஆனால் 28.2 ஓவர்களில் 217 ரன்களை மட்டுமே கொடுத்ததால் 99 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்பு ஷ்ரேயாஸ் ஐயர் சதம் அடித்தது குறித்து ரசிகர் ஒருவர் புள்ளி விவரங்களுடன் சில விவாதங்களை முன் வைத்துள்ளார். அந்த வகையில் சுப்மன் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக மெதுவாக ஆடினார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அந்த ரசிகர் : சுப்மன் கில் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் திறமையான வீரர்கள் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அவர்கள் சுயநலமாக ஆடினார்கள் என்பது உண்மை.
ஏனெனில் அவர்கள் இருவரும் சதத்தை நெருங்கும் போது 29 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட எடுக்கவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த இரண்டு வீரர்களும் தங்களின் சதங்களை பூர்த்தி செய்வதற்காகவே ரிஸ்க் எடுக்காமல் மெதுவாக விளையாடினர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் போட்டியின் நேரலையின் போது சஞ்சய் மஞ்சரேக்கர் : அந்த 2 வீரர்களும் தங்களது சுய சாதனையை தாண்டி இந்திய அணியின் வெற்றிக்காகவே இவர்கள் இருவரும் விளையாடினர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.