ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுலை விடுங்க.. இவர நம்பித்தான் இந்திய அணியின் மிடில் ஆர்டரே இருக்கு.. என்ன ஹர்பஜன் இப்படி சொல்லிட்டாரு…

- Advertisement -

இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அனுபவம் வாய்ந்த வீரர்களை நம்பி இந்திய அணி தேர்வு செய்துள்ளது.

கிட்டத்தட்ட பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசியக் கோப்பை போட்டியில் ஆடிய வீரர்களுடன் சேர்த்து ஷமி, சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் அணியில் நீடிக்கின்றனர். கேஎல் ராகுல் காயத்தில் இருந்தாலும், எந்தவித பேட்டிங் சோதனையும் இல்லாமலேயே உலகக்கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் ஹர்பஜன் சிங் பேசும் போது, கடந்த ஒரு வாரமாக இந்திய அணியின் பேட்டிங்கை தான் பார்த்து வருகிறோம். என்னை பொறுத்தவரை இந்திய அணியின் பேட்டிங் தான் இன்னும் நன்றாக முன்னேற வேண்டிய தேவை உள்ளது. அதேபோல் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை நம்பி தான் பேட்டிங் வரிசை உள்ளது.

ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயர் நீண்ட மாதங்கள் ஓய்வுக்கு பின் அணிக்கு திரும்பி இருக்கிறார். அதேபோல் இஷான் கிஷன் சிறப்பான ஃபார்மில் இருக்கிறார். ஆனால் கேஎல் ராகுல் விளையாடுவாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதனால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் ஹர்திக் பாண்டியாவை நம்பி தான் கட்டமைக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு ஹர்திக் பாண்டியாவின் ஆட்டமும் முக்கியம். இந்திய அணி வீரர்கள் அனைவரும் குழுவாக இணைந்து வெற்றிக்கு பங்களிக்க வேண்டும். அப்போது தான் இந்திய அணியால் வெற்றிபெற முடியும். இல்லையென்றால் சொந்த மண்ணில் விளையாடினாலும் சவால் தான் என்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் முடிந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா 87 ரன்கள் குவித்து மிரட்டலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இதனால் மிடில் ஆர்டரில் முக்கியமான ஆட்டங்களில் ஹர்திக் பாண்டியாவின் ஆட்டம் வேற லெவனில் இருக்கிறது. இவருக்கு உறுதுணையாக மற்ற வீரர்கள் ஆடினாலே இந்திய அணியால் எளிதாக வெற்றிபெற முடியும் என்று பார்க்கப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்