- Advertisement -
Homeவிளையாட்டுஇந்திய அணியில் இடம் இல்லை.. இங்கிலாந்து சென்ற பிரித்வி ஷா.. இனி எல்லாமே அப்படிதான்!

இந்திய அணியில் இடம் இல்லை.. இங்கிலாந்து சென்ற பிரித்வி ஷா.. இனி எல்லாமே அப்படிதான்!

- Advertisement-

இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. 2018ஆம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான பிரித்வி ஷா, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இதன் பின் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துடன் பிரித்வி ஷாவின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது என்றே சொல்லலாம்.

பிரித்வி ஷாவின் பேட்டிங்கில் இருக்கும் பிரச்சனை பற்றி ரிக்கி பாண்டிங் சொல்லிக் கொண்டிருந்த போது, சரியாக அதே போல் ஆட்டமிழந்து வெளியேறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின் பிரித்வி ஷாவின் ஷார்ட் பால் பிரச்சனையை பந்துவீச்சாளர்கள் கண்டறிய, ஐபிஎல் தொடரிலும் அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

ரிஷப் பண்ட் இல்லாமல் டெல்லி அணி களமிறங்கிய போது பெரிய இம்பேக்டை ஏற்படுத்துவார் என்று பார்க்கப்பட்ட நிலையில், ஒரேயொரு அரைசதம் மட்டுமே அடித்தார். இதையடுத்து பிரித்வி ஷாவிற்கு இந்திய அணியின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டன. ஆசிய போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட இந்திய அணியில் கூட பிரித்வி ஷாவின் பெயர் இடம்பெறவில்லை. அதுமட்டுமல்லாமல் ஆஃப் ஃபீல்ட் சர்ச்சைகளும் பிரித்வி ஷா சிக்கினார்.

இதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் சாய் பாபா புகைப்படத்தை பதிவிட்டு ஆன்மிக ரீதியாக வேண்டுதல்களை பிரித்வி ஷா முன்வைக்க, சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கிண்டல் செய்யப்பட்டார். இந்திய ரசிகர்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில், பிரித்வி ஷா அண்மை காலங்களாக விரக்தியான கருத்துகளை கூறி வந்தார்.

- Advertisement-

இந்த நிலையில் இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டொமஸ்டிக் ஒன் டே கோப்பை தொடரில் நார்த்தம்டன்ஷையர் அணிக்காக விளையாட பிரித்வி ஷ ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்காக அவர் ஜூலை மாதமே இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அதனால் தியோதர் டிராபி தொடரில் கூட பிரித்வி ஷா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஆகஸ்ட் 4ஆம் தேதி நார்த்தம்டன்ஷையர் அணி கிளவ்செஸ்டயர் அணியுடன் மோதவுள்ளது. இந்தப் போட்டியில் பிரித்வி ஷா களமிறங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நார்த்தம்டன்ஷையர் அணிக்காக ஆடிய பயிற்சி போட்டிகளில் பிரித்வி ஷா அரைசதம் விளாசியது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்